செவ்வாய், 5 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 71. வி.இ.லெனின்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 71.  வி..லெனின்.


சமுக நடப்பியல் இலக்கியம் / மக்கள் இலக்கியம்.


பொதுவாக மார்க்சீயம்  1. நிலப்பிரத்துவச் சமுக இலக்கியம்.

2. முதலாளித்துவச் சமுக இலக்கியம்.

 எனப் பொது இலக்கிய வகைகளை இரண்டாகக் கருதுகிறது.

                  

 சமுதாயத்திற்கு உணர்த்தவேண்டிய உண்மையான  மனுனிதச் சித்திரப்பையோ அல்லது எதிர்காலத் தன்மையையோ உள்ளடக்கியதாக இல்லை.  மானுட விடுதலை கூறுகின்ற மக்கள் இலக்கியங்களாக அமையவில்லை என்பதை 19ஆம் நூற்றாண்டின் தொடக்க கால அரசியல், பொருளாதாரச் சூழல்கள் உணரச்செய்தன. இவ்விரண்டு வகை இலக்கியங்களும் குறைபாடுகள் உடையன. இத்தகைய படைப்பிற்குப் பின்னே ஏதாவது ஒரு  வர்க்க நலன் ஒளிந்து கொண்டிருக்கும்.


 மார்க்சீய இலக்கியவாதிகள் ’மனித நேயம்’ (Humanism) நடப்பியல் (Realism) ஆகிய இரண்டும் இணைந்த சமுக நடப்பியல் (Socialistic Realism) அல்லது  ”சோசலிச எதார்த்தவாதம்’ என்ற ஒரு புதிய இலக்கிய வகையைத் தோற்றுவித்தனர். இவ்வகை இலக்கியங்கள் காரல் மார்க்சின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை.


மக்கள் இலக்கியம் – லெனின்.


“மக்களைப்பற்றி எழுதுவது மட்டுமல்ல  மக்களூக்காக எழுதுவதும் இணைந்ததுதான் மக்கள் இலக்கியமாகும். ‘ கலை ,இலக்கியம் யாவும் மக்களுக்கு உரியவை.” அவை மாபெரும் மக்கட்சமுதாயத்தில் ஆழமாக வேரோடிக் கிடக்கின்றன. கலை, இலக்கியத்தைப் புரிந்து தெரிந்து நேசிக்க வேண்டும்.  இலக்கியம் பொதுமக்களின் உணர்ச்சி எழுச்சிகளை சிந்தனை ஓட்டங்களை, மன உறுதிகளை ஒன்றுபடுத்தி அவர்களை வாழ்வில் உயர்த்த வேண்டும்.”

இயல்புகள்:

 

……………………………………………….தொடரும்.

ஞாயிறு, 3 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 70. வி.இ.லெனின்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 70.  வி..லெனின்.


இயக்கவியல்:


கெகலின் போதனையே இயக்கவியலின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது ;


   இயக்கவியலின் பொதுவான வடிவங்களைப் பற்றிய முழுமையான, உணர்வுப்பூரணமான சித்திரத்தை கெகல் தான் முதன்முதலாகத் தீட்டித்தந்தார் “ என்று எழுதினார் மார்க்சு.

                     ”எல்லாப் பொருள்களும் தமக்குள்ளே முரண்பாடுகளைக் கொண்டுள்ளன என்றும் இந்த முரண்பாடுதான்  எல்லா இயக்கத்திற்கும் எல்லா உயிர்த்திறனுக்கும் வேர்.  ஒவ்வொன்றும் தனக்குள்ளேயே முரண்பாடு கொண்டிருப்பதால்தான் அது இயங்குகிறது” என்பது கெகலின் இயக்கவியல். இக்கருத்தில் கருத்துமுதல் வாத தன்மை இருப்பதாக மார்க்சு,எங்கெல்சு ஏற்கவில்லை. இவர்களைப் பொறுத்தவரையில்....


” இயக்கவியல் விதிகளை இயற்கையில் நிர்மாணிப்பது என்ற பிரச்சினையே இல்லை, மாறாக அவற்றை இயற்கையில் கண்டறிவதும் அதிலிருந்து முறையாக் வெளிப்படுத்துவதுமே தேவை என்றனர். 

இதுவே...

 பொருள்முதல்வாத இயக்கவியல்:( லெனின்.)

ஒவ்வொன்றும் எல்லாவற்றுடனும் உலகளாவிய முழுமையான ஜீவாதாரத் தொடர்பு கொண்டிருக்கின்றன என்றார் லெனின். மேலதிகமாக விளக்கிய லெனின் “ இயற்கையில் நிரந்தரமாக எதுவுமே இல்லை, என்றும் வளைச்சிக் கட்டங்களின் மாற்றமே நிரந்தரமானவைஎன்றும் ஒவ்வொரு கட்டமும் சிறிது காலத்திலோ காலந்தாழ்ந்தோ முற்றிலும் வேறான ஒரு கட்டத்திற்கு வழிவிட்டு மறைந்து போகிறது என்றும் இந்த புதிய கட்டத்திற்கும் அதே கதி நேருகிறது என்றும் கூறி உலகம் எனபது பொருள்களின் சேர்க்கை அல்ல. நிகழ்ச்சிப்போக்குகள் , தொடர்புகள், உறவுகள் ஆகியவற்றின் சேர்க்கையே என்றும் எல்லாப் புலப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடுகள் இருக்கின்றன. என்றும் இந்த விஞ்ஞான அறிவு எடுத்துக்காட்டியது.


  உழைப்பே மனித அறிவுத்திறனைத் தோற்றுவித்து, புராதன மனித மந்தையை ஒழுக்க நெறி, விஞ்ஞானம், கலை ஆகியவை கொண்ட மனிதச் சமுகமாக உருமாற்றியது. உழைப்பே நம்மை மனிதப்பண்பு பெறச்செய்தது; அதுவே மனிதனின் சாரம்.

……………………………………………….தொடரும்.

 

 

சனி, 2 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 69. வி.இ.லெனின்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 69.  வி..லெனின்.


              “பொருள் வகை உலகு அல்லது இயற்கைதான் உணர்வு, அதாவது ஆன்மாவைத் தோர்றுவிக்கிறது என்று கூறுகின்றவர்கள் பொருள்முதல்வாதிகள்.


                           எல்லாப் பொருள்களும் இடையறாத இயக்கத்தில் இருக்கின்றன என்றும் தோன்றி மறைந்து வருகின்றன என்றும் இவை எல்லாமே  ஏதோ ஒரு வழியில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன என்றும்  உள்ளுக்குள்ளேயே முரண்பாடு கொண்டிருக்கின்றன என்றும் தத்துவ ஞானிகள் கண்டார்கள். இந்த ஆதி நிலையிலான அறியாப் பருவத்திற்குரிய, ஆயினும் உள்ளியல்பில் பிழையற்ற கருத்தோட்டம் ‘இயக்கவியல் சிந்தனைமுறை அல்லது பண்டைய இயக்கவியல் என்று அழைக்கப்படுகிறது.


                              ஒரு பொருள் அதன் நிலையை மாற்றிக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தும் புற சக்தியின் பிரயோகமே எல்லா இயக்கங்களுக்கும் மூலகாரணம் என்று உய்த்துணரப்பட்டது.


                        இயற்கையில் அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கின்றனவாயினும் இந்த இயக்கமானது மாறாமல் இருந்துவரும் சுழற்சிகள் வடிவங்கள் ஆகியவை திரும்பத் திரும்ப தோன்றி மறையும் இயக்கமே என்று சொல்லும் கருத்தினையே அறிவியல் அறிவு ஊட்டியது.”

……………………………………………….தொடரும்.

வெள்ளி, 1 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 68. வி.இ.லெனின்

 

சான்றோர் வாய் (மை) மொழி : 68.  வி.இ.லெனின்

 

           Vladimir Ilyich Ulyanov  Lenin – 1870 – 1924.

விளாதீமிர் இலியீச் லெனின் இலியனவ்.


“மார்க்சின் மூதனம் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நாடு இரசியா, பாட்டாளி வர்க்கம் வெற்றியடைந்த முதல் நாடும் இரசியாவே.

 மார்க்சு மரணமடைந்த வருடத்தில் நெடுந்தொலைவுக்கு அப்பால் சிம் பீர்சுக் என்னும் இரசிய நகரில் வி.இ.லெனின் என்ற பதின்மூன்று வயது பள்ளி மாணவன் ஏற்கெனவே புரட்சிகர சனநாயக நூல்களைப் படிக்கத் தொடங்கியிருந்தான். அவன் பதினந்தாம் வயதில் மார்க்சின் மூலதனத்தைப் படித்து முடித்தான். அவன் வெகுவிரைவில் இரசியாவில் மார்க்சீயத்தை எழுச்சியுடன் பரப்புவோனாகவும் புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் அமைப்பாளனாகவும் மாறினான்.

 மார்க்சீய லெனினியம் வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை. குறுங்குழு வாதக் கோட்பாட்டின் வரயறைக்குள் தன்னை அடைத்துக்கொள்வதில்லை. மனித குலத்தின் மொத்த கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பொதுமைப்படுத்தி விமர்சனரீதியில் புத்தாக்கம் செய்வதை அடிப்படையாகக்கொண்ட மார்க்சீயம் மனிதகுல மேதைகளின் மகத்தான சாதனைகளைத் தன்வயமாக்கிக் கொண்டு மேலும் வளர்ச்சி அடைகிறது.

……………………………………………….தொடரும்.