சனி, 16 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 78. மெய்யியல் கோட்பாடுகள்

 

சான்றோர் வாய் (மை) மொழி : 78.   மெய்யியல் கோட்பாடுகள்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

எங்கெல்சு.

“ மனித இனத்தின் வயது பத்து இலட்சம் ஆண்டுகளுக்குச் சற்றே அதிகம். வான்வெளிக் கப்பல்கள் மூலமும் இதர ஆய்வுகளின் மூலமும் பூமிக்கும் அதன் துணைக் கிரகமான சந்திரனுக்கும் இடையில் எங்கும் எத்தகைய உயிர்களும் இல்லை என்றும்  சிந்தனை ஆற்றல் உள்ள உயிர்கள் இருப்பதுபற்றிப் பேச்சே இல்லை என்றும் விஞ்ஞானிகள் உறுதியாக முடிவு செய்திருக்கிறார்கள்.

 எல்லையற்ற பிரபஞ்சத்தில் எண்ணற்ற வடிவங்களில் உயிரினங்கள் இருக்கக்கூடும் என்ற போதிலும் இந்த உயிரினங்களின் ஒரு சிறு பகுதிக்குத்தான் சிந்திக்கும் திறன் இருக்கிறது என்று தெரிகிறது. பூமியாகிய இந்த வட்டத்தில் உயிரும் சுய உணர்வும் செயல்படுகிற இடவெளி (Space) எப்படி குறுகலாக  வரையறுக்கப்பட்டுள்ளதோ அதைப்போலவே சீவராசிகளுக்கான  காலமும் குறுகலாக வரையறுக்கப்பட்டுள்ளது ; இதைவிட இயற்கையைப்பற்றியும் தங்களைப்பற்றியும் சுயவுணர்வுள்ள ஜீவிகளின் வாழ்வுக்கான காலமும் வரையறுக்கப்பட்டுள்ளது.

நவீன விஞ்ஞான அறிவின் மூலம் பார்க்கையில் சிந்தனை என்பது பிரபஞ்சத்தின் பலப்பல படைப்புகளில் ஒன்றே என்று தோன்கிறது.. காலம் (Time) விசும்பு (Space) ஆகியவற்றைப் பொறுத்தவரை எல்லையற்றதாய் இருக்கும் பிரபஞ்சம் சிந்தனையால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கூற்று கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளத் தகாத்தாய் தோன்றுகிறது.

தத்துவஞானம் –ஜோ.ஃபிஹ்தே (Fichte 1762 - 1814 ) செர்மானிய  தத்துவ ஞானி. 

தத்துவஞானம் ‘ மனித அறிவின் எல்லா அடிப்படை அம்சங்களையும் முடிவாகத் தருகிறது…. ஒரு பிரச்சினையைப்பற்றிச் செய்யப்படுகிற ஒவ்வொரு ஆராய்ச்சியும் அப்பிரச்சினைக்கு இறுதியான தீர்வு கண்டு விடுகிறது.

எங்கெல்சு-

இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே தத்துவ ஞானம். இந்த விஞ்ஞானம் மனித இனம் சேமித்து வைத்துள்ள அறிவு அனைத்திலிருந்தும் பெறப்பட்ட முடிவாகும்.

ஜே.பி. எசு. ஹால்டேன் (Haldane)

இயக்கவியல் பொருள்முதல் வாதத்தில் படிப்படியாக அதிகரித்துவந்த எனது அறிவு நான் அண்மையில் பிரசுரித்துள்ள விஞ்ஞான ஆய்வுகளில் பெரும்பகுதியை  நிறைவு செய்வதற்கு ஊக்கம் அளித்தது. விஞ்ஞான ஆராய்ச்சி பணிபுரிவதற்கு. இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு பயனுள்ள சாதனம் என்பதை நான் காண்கிறேன்.

காரல் மார்க்சு :

“தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சிதந்திரமான அறிவே.. ”எல்லாவற்றயும் சந்தேகப்படு” என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை.

தத்துவஞானம் – துல்லியமான விஞ்ஞானங்களையும் கலையையும் போலன்றி – மனிதனுக்கு சிந்தனை செய்யக் கற்பிப்பதைத் தன்னுடைய முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

தத்துவஞானிகள்  உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள், ஆனால் விஷயம் என்னவோ அந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான்.

உலகம் என்பது என்ன என்ற கேள்விக்குத் தத்துவஞானம் பதில் தருவது மட்டுமின்றி அதன்பால் நாம் என்ன போக்கை மேற்கொள்ள வேண்டும் எவ்வாறு இதனை மாற்றி அமைக்கவேண்டும்  என்ற கேள்விக்கும் அது பதிலளிக்கிறது,

 …………………………தொடரும்………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக