சான்றோர்
வாய் (மை) மொழி : 85. பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.
அகப்பொருள்காட்சியும் கருத்தும்.
தொல்காப்பியர்
அகத்திணையியலில் களவு, கற்பு எனும் இருபெரும்
பிரிவுகளில் மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்தியம்புகின்றார்.
ஆடவர் இயல்பு :
“பெருமையும் உரனும் அடூஉ மேன” -1044.
பெருமையும்,
வலிமையு, ஆடவர் இயல்பு ; இஃது உலகம் முழுவதும் பொருந்தும்.
இது தலை மகற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. பெருமையாவது பழியும்
பாவமும் அஞ்சுதல் ; உரன் என்பது அறிவு. இவை
இரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு.
“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு “ குறள். 422. – இளம்பூரணர்.
பிறர்
பாராட்டும் பெருமையுடன் சிறந்து விளங்குதலும் ; நன்னெறி குன்றாது வலிமையுடன் வாழ்வதும்
ஆடவர்க்குரியனவாகும்.
பெண்டிர் இயல்பு:
”அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப.” – 1045.
“ இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. என் எனின். அச்சமும் நாணும் பேதைமையும் இம்மூன்றும்
நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பு என்றவாறு.” –இளம்பூரணர்.
அச்சம்,
நாணம். மடன் என்ற மூன்று பண்புகளும் நாள்தோறும் முன்னிற்பவை, பெண்டிர்க்கு உரியவை ஆகும்.
அச்சமாவது
பழிக்கு அஞ்சுதல் ; நாணமாவது பெண்டிர்க்கு இயற்கையாய் அமையும் அழகு ;மடனாவது அறியாமையாவது
தன்னிலையில் தெளிவின்மையாகும்
பெண்டிர் இயல்புகள் :
”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான. “-1155.
அடக்கம்,
அமைதி, நேர்மை, உண்மை உரைக்கும் சொல்வன்மை,
நன்மை தீமைளை அறியும் அறிவு, உள்ளத்தின் கருத்தறிதல் அருமை என்பன பெண்டிர் இயல்புகள்.
தலைமகனுக்கும் தலைமகளுக்கும் உரிய இயல்புகளைச்சுட்டிய
தொல்காப்பியர் இருமனம் இணையும் திருமணம் குறித்தும் கூறுகிறார்.
…………………………தொடரும்………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக