சான்றோர் வாய் (மை)
மொழி : 77. மாமேதை வி.இ.லெனின்.
லெனின் நடத்திய மாபெரும் புரட்சிக்கு மக்களின்
மகத்தான பங்களிப்பை வரலாறு எடுத்தியம்புகிறது.
லெனின்
ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முதல் நாள் இரவு,
“ நிலப் பிரபுக்களுக்கும் சர்ச்சுகளுக்கும் மடங்களுக்கும் எல்லாவகை பணக்காரர்களுக்கும்
உரிய நிலங்கள் நிலமற்ற குடியானவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
நிலத்தில் உழைக்காதவர்களுக்கு நிலம் கிடையாது” என்று ஓர் அரசாணை எழுதினார். எல்லாரும்
எல்லாம் பெற்றதனால் புதியதோர் உலகமாக இரசியா விளங்கியது.
.
லெனின்
ஆட்சியில் மக்கள் தங்கள் தாய்மொழியிலேயே கல்வி
பெறலாம். ஆட்சி நடத்தலாம் எல்லா மொழிகளுக்கும் சோவியத் நாட்டில் சம மதிப்பும் உரிமையும் உண்டு என்ற
நிலயை லெனின் உருவாக்கினார். எழுத்துரு இல்லாத
சிறுபான்மையினர் (1300 எசுக்கிமோக்கள்) மொழிகளுக்குக்கூடச் சமத்துவம் தந்தவர் லெனின்
. எழுத்துரு இல்லாத மொழிகளுக்கு எழுத்துருவை உருவாக்க ஒரு குழுவை அமைத்து அவர்தம் தாய்மொழியில்
கல்வி கற்க ஏற்பாடு செய்தார். அதனால் நாடு
முழுவதும் 53 மொழிகளில் கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டது.
பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான் சமுதாயம் முன்னேறும்
என்பதில் லெனின் உறுதியாக இருந்தார் லெனின் 12 கோடி தற்குறிகளுக்கு எழுத்தறிவு புகட்ட
முனைந்து செயல்பட்டார். மன்னர் ஆட்சியில் வீட்டிற்குள்ளேயே
முடங்கிக் கிடந்த பெண்கள் கல்விக்கூடம் வரத் தயங்கினர்., பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லையென்றால் பெண்கள்
இருக்கும் இடத்திற்குப் பள்ளிக்கூடம் போகட்டும்
என்று ஆணையிட்டார்”. இதனால் சமையல் கூடமெல்லாம் பள்ளிக்கூடங்களாகின. அவரவர் த்தம் தாய்மொழியில்
கல்வி கற்றனர்.
இந்த உலகத்தில் லெனின் சாதித்தவற்றுள் மகத்தானது “படி, படி, மேலும் படி”
என்னும் நன்னெறியே.!
நாட்டு
மக்கள் மடமைக்கும் பழமைக்கும் சுயநலக்காரர்களுக்கும்
அடிமைப்படாமல் விடுதலை பெற்று வாழ்வும் வளமும்
பெறவும் கல்வி புகட்டினார். நூலறிவின்றி முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதை நன்கு உணர்ந்த
லெனின் முதியோர் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்தினார்.
படித்தே கண்களை இழந்தார் மில்டன், மக்களுக்கு
உழைத்தே உருக்குலைந்து போனார் லெனின். அறியாமை இருளகற்றி அறிவுக்கண் திறந்த ஈடுஇணையற்ற
புரட்சியாளர் மாமேதை லெனின் 1924இல் மறைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக