செவ்வாய், 12 நவம்பர், 2024

 

சான்றோர் வாய் (மை) மொழி : 74.  வி..லெனின்.

 

கல்விக் கொள்கை :

அறிவு வளர்ச்சியில் கல்வி ஒன்றே சிறப்பிடம் பெறுகிறது.

இயக்கவியலும் அறிவுக்கொள்கையும்” – பேராசிரியர் க. கைலாசபதி.” அவர்கள் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம்.

    

மார்க்சிசம் – லெனினிசத்தின்படி, அறிவு வளர்ச்சி என்பது இயக்கவியல் முறை ஒன்றாகும் : மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற மூன்று படிநிலைகளினூடாக  அடுத்தடுத்து அது நிகழ்கிறது. இது குறித்து “நடைமுறையைப்பற்றி”   என்னும் மா ஓ சேதுங் கூறியிருப்பவை விஷயத்தைத் தெளிவாக்குவனவாயுள்ளன.

முதலாவது படிநிலை புலன் அறிவு நிலையாகும்.

“அறிவு வளர்ச்சியின் முதல் நடவடிக்கை புற உலக விஷயங்களோடு தொடர்பு கொள்வதாகும். இது புலன் அறிவுக் கட்டமாகும்…. அறிவு அநுபவத்தில் தொடங்குகிறது. அறிவு இயலின் பொருள்முதல் வாதம் இதுவே.”

இரண்டாவது படிநிலை பகுத்தறிவு நிலையாகும்.

 “இரண்டாவது நடவடிக்கை புலன்களால் அறிந்தவற்றை மீண்டும் முறைப்படுத்துவதின் மூலம் அல்லது புனர் அமைத்தல் மூலம் ஒன்று சேர்த்தல்’ இது கருத்துக்களை உருவாக்கி மெய்ப்பொருளை மதிப்பிட்டு முடிவு செய்யும் நிலையாகும்….. பகுத்தறிவு புலன் அறிவைப் பொறுத்திருக்கிறது. புலன் அறிவு பகுத்தறிவாக வளர்க்கப்படல் வேண்டும் அறிவு இயலின் தருக்க இயல் பொருள்முதல் வாதத் தத்துவம் இதுவே.”

மூன்றாவது படிநிலை தத்துவமட்டத்திலிருந்து மீண்டும் நடைமுறைக்குச் செல்வதாகும்.

“அறிவு நடைமுறையில் உதயமாகிறது : நடைமூலம் தத்துவார்த்த மட்டத்தை அடைகிறது. பிறகு அது நடைமுறைக்குத் திரும்ப வேண்டும். உலகத்தின் விதிகளைக் கிரகிப்பதற்கு வசதி செய்யும் அறிவை, உலகத்தை மாற்றும் நடைமுறைக்குப் பயன்படுத்த வேண்டும் – அதாவது பொருள் உற்பத்திச் செயலுக்கு , விஞ்ஞானப் பரிசோதனைக்கு ப் பயன்படுத்த வேண்டும். இதுவே தத்துவத்தைச் சோதித்து விருத்தி செய்யும் முறை; அறிவு வளர்ச்சி என்ற முழு நிகழ்ச்சியின் தொடர்ச்சி.”

………………… ……………………  ………………..           

இதுகாறும் கூறியவற்றிலிருந்து சமுதாயத்தின் பெளதிக நிலைமைகளே கல்விக் கொள்கைகளை நிர்ணயிக்கின்றன என்பதும், மக்கள் அனைவருக்கும் சமசந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதே உடலுழைப்புக்கும் மன உழைப்புக்கும் இடையேயுள்ள பாரதூரமான இடைவெளி நீக்கப்படும் என்பதும் சமசந்தர்ப்பம் என்பது ஆண் பெண் சமத்துவத்தையும் உள்ளடக்கும் என்பதும் ஒருவாறு புலப்படும் அறிவு, பிரயோகம் ஆகிய இரண்டினதும் ஒருங்கிணைப்பால் முழுமையான கல்வியைச் சோசலிச சமுதாயம் உருவாக்குகிறது. சிறு வயதிலிருந்தே மாணாக்கருக்கு ஒழுக்கம், அழகுணர்ச்சி, உடற்பயிற்சி, ஒருமைப்பாடு முதலியவற்றைப் படிப்படியாக அறிவுறுத்த முனைகின்றது இவை தனி மனிதருக்கும்  உலகத்திற்குமுள்ள இயைபின்மைகளை அகற்ற வழிகோலுகின்றன. மனித ஆளுமையை வளர்க்கவும் பூரணப்படுத்தவும் ஏதுவாகின்றன. “சிந்தையின் செம்மை” என்று கம்பன் கூறிய நிலை சோசலிச க் கல்வியிலேயே சாத்தியப்படும். அந்நிலையில் “செய்யும் தொழிலே தெய்வம்” ஆகும்.

உழைப்பு , மொழி,  சிந்தனை: லெனின்.

……………………… ……………………….தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக