சான்றோர்
வாய் (மை) மொழி : 82. சிந்தனை: விளக்கம்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்ப தறிவு
–குறள்:423.
முதல் நிலை:
“இவ்வாறு அறியும் போது முதல் படியில்
தோன்றுவது காட்சி அறிவு (Perceptual Knowledge)
இவற்றை மூளை பொதுமைப்படுத்தி அறிகிறது.
இரண்டாம் நிலை:
காட்சி அறிவிலிருந்து பொதுமைப்படுத்தப்பட்ட
கருத்தறிவு (conceptual Knowledge) இஃது இரண்டாம் நிலை.
இக்கருத்துப் படிமங்களைக் (Conceptual
Images, Ideas) கொண்டு மேலும் சிந்திக்க மூளையால் இயலும். இப்பொழுது வெளியுலகத்
தொடர்பின்றி மூளையினுள்ளேயே சலனம் நிகழ்கிறது.
பல கருத்துக்களைக் கொண்டு சிந்திப்பதாலேயே அறிவியலில் கருதுகோள்கள் ஏற்படுகின்றன, இதனை
(Ideational
Thinking) என்று கூறுகிறோம். இதுதான் தருக்கவியலின்
பொருள். அதற்குமேல் பல கருத்துக்களையே சிந்தித்து,
நிரூபணம் செய்து பொது விதிகளையும், அவற்றிற்கு அடிப்படையான தத்துவங்களையும் மூளை உருவாக்குகிறது.
இதற்கு (Theorising….)
அல்லது இயக்கவியல் தருக்கம் (Dialectical
Logic) என்று பெயர்.
சான்று:
பொருள்முதல் வாத அடிப்படையிலேயே செல் முதல் மனிதன்
வரையுள்ள உடல் வளர்ச்சியையும் உயிரியல் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்க
முடியும். மூளையின் செயற்பாட்டை அறியாத காரணத்தால் சீவன், புத்தி, மனம், நினைவு முதலிய
கற்பனைகளை நமது பண்டைய தத்துவவாதிகள் படைத்தனர்.
இன்று உயிர் எனறால் ஏதோ புரியாத ஒன்றாக இருக்கவில்லை.
இஃது உடல் என்ற மிகச் சிக்கலான பொருளமைப்பின் ஒரு பண்பு.இஃது உடலினுள் நடைபெறும் உயிரியல்
இரசாயன மாற்றங்களின் ஒரு தொகுப்பு (Totality)
இம்மாறுதல் வரிசைத் தொடர்புமாறி , திசை மாறிவிட்டால் மாறுதல் நின்றுபோய்விடும் , அப்படிப் போய்விட்டால்
செல்கள் வாழமாட்டா. அவைகள் பிரிந்து வேறு எளிய பொருள்கள் தோன்றத் தொடங்கும். இதுதான்
சாவு. இவ்வறையறைக்கு மூலமான சில கூறுகளை எங்கெல்சு தனது “இயற்கையின்
இயக்கவியல்” என்ற நூலில் கூறியுள்ளார்.
பின்னாளில், செல்லிலிருந்து மனிதன்வரை
ஏற்பட்ட வளர்ச்சியை டார்வின் முதல் ஹால்டேன்வரை விளக்கியுள்ளனர். இம்மாறுதல்களின் அடிப்படைப்
பொது விதிகளை டார்வின் நிறுவியுள்ளார்.
முடிவுரை:
ஜான் டூயி (John
Dewey)-1859 – 1952.
தருக்கம் (:Logic
or Theory of Inquiry) எனும் நூலி.ல்
“ சிந்தனை என்பது ஒரு கருவியாகும் (Instrument) என்றும் உண்மை எனபது நாம்
அடைய விரும்பும் இலக்குகளை அடைவதற்கு நமது
கருத்துக்கள் எந்த அளவுக்குப் பொருத்தமாகக் காணப்படுகின்றன் என்பதனைச் சார்ந்ததாகும்.”
என்று கருதினார்.
சிந்தித்து தெளிதல் எவ்வாறு…?
இவ்வினாவிற்கு லெனின் கூற்று சான்றாகும். “ கம்யூனிசம் என்பது புத்தகங்களில்
படித்த முடிவுகளைக் குருட்டுத்தனமாக நம்புவது அல்ல. படித்தவற்றைக் கவனமாக எடை போட்டு,
ஆழ்ந்து சிந்தித்து முடிவுகளைச் சான்றுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, இந்த முடிவுகள்
உறுதியாக மெய்ப்பட்டிருக்கின்றன என்று கண்டு ஒருவன் வந்தடைகின்ற உலகக் கண்ணோட்டம் தான்
கம்யூனிசம்,” என்றார்.
சிந்தனை உதவாது : ரூசோ
(………….) 1712 – 1778.
ரூசோவின் இயற்கை கொள்கை (Naturalism.)
புரட்சிகரமானது. “ நமது நடத்தையை நல்ல வகையில் திசைப்படுத்துவதற்கு நமது சிந்தனை எல்லாக்
காலங்களிலும் நமக்கு உதவாது என்றும் இதற்கு
ஏற்றது நமது மனவெழுச்சிகளேயாகும் (Emotions)
என்றும் இவரின் இயற்கை கொள்கை கருதியது. மனவெழுச்சிகள் மனிதனது உண்மை இயல்பின் சிறந்த வெளிப்பாடுகளாகும்.
சமுக ஒப்பந்தம் (Social Contract)
என்னும் நூலில் ரூசோ மனிதர்கள் எளிமையாக இயற்கையோடு இசைந்து வாழ்க்கை நடத்தியும் தங்களது
பிரச்சினைகளைத் தாங்களே ஒத்துழைத்துத் தீர்த்துக்கொண்டு வாழ்க்கை நடத்தியும் செயற்படும்
ஓர் இலட்சிய சமுகத்தை (Ideal State ) எழுதுகிறார்.
…………………………தொடரும்………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக