புதன், 13 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 75. வி.இ.லெனின்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 75.  வி..லெனின்.

உழைப்பு , மொழி,  சிந்தனை: லெனின்.

“ஒரு விலங்கின் வாழ்க்கை முறையும் அதனுடைய பழக்கங்களும் மனப்பாங்கும்  “இயற்கை நிலைமைகளால்” அதாவது அதன் சொந்த இயல்புகளையும் சுற்றுச்சூழலையும் பொறுத்ததாய் இருக்கின்றன. ஆனால் மனிதனோ ஒரு சமுக ஜீவி ஆவான். அவனது வாழ்க்கைமுறை, செயற்பாடு, மனப்பாங்கு ஆகியவை அனைத்தும் அவன் வாழ்ந்து வருகின்ற சமுகத்தினாலேயே முற்றிலும் நிர்ணயிக்கப்படுகின்றன.

மொழி:

 ஒவ்வொரு சொல்லும் (பேச்சும்) ஏற்கெனவேஎ பொதுமைப்படுத்துகிறது.

                      மொழி என்று சொல்லப்படுகின்ற அடையாள அறிவிப்பான  பொருள்வகைப் புலப்பாடு ஒன்று இல்லாமல் கருத்துக்களோ சிந்தனைகளோ தோன்றி இருக்க முடியாது. உணர்வைப்போலவே மொழியும் மிகப் பழைமையானதாகும்.

                       மொழியே தகவல்களைப் பரப்பி அறிவைத் திரட்டி வைக்கிற சாதனமாக விளங்குகிறது.

                   சிந்தனையின் நேரடியான மெய்ம்மையாக இருக்கிறது மொழி. மற்றக் குறியீட்டு அமைப்புகளின் குறைபாடுகள் எதுவும் அதனிடம் இல்லை என்பதுதான்  மானுட மொழியின் சிறப்பு. மொழியின் மூலக்கூறாக விளங்குவது சொல்.

                      அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் மொழி வகிக்கிற முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டிய லெனின் உணர்ச்சிகள் எதார்த்த உண்மையைக் காட்டுகின்றன; சிந்தனையும் சொல்லும் சர்வப்பொதுமையைக் காட்டுகின்றன.

                        மனித கலாச்சார வாழ்விற்கு அளப்பரிய பங்கு,பணி ஆற்றுகிறார்கள் மக்கள். கருத்துக்களை வெளியிடுவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும்வகை செய்கின்ற மொழி என்ற ஒருமுறைமையை மக்கள் உருவாக்கினர்.இது இல்லமல் எத்தகைய கலாச்சாரமும் இருந்திருக்க முடியாது. மொழியானது மக்களின் பொது வேலையையும் முயற்சியையும் சாத்தியமாக்கியது மட்டுமின்றி  ஆன்மிக கலாச்சாரம் வளர்வதற்காக அடித்தளங்களையும் வழங்கியது.

 உழைப்பு :

                  மனித செய்கையான “உழைப்போ” இயற்கையை மனிதன் தனக்கெனத் தகவமைத்துக்கொள்வதாகும். பொருள்களை அடிப்படையிலேயே மாற்றுவதன் மூலம் தனது தேவைகளுக்கு இயற்கையைச் சேவை செய்ய வைக்கிறான் மனிதன். மனிதன் மனத்தில் இது ஏற்படுத்துகின்ற பிரதிபலிப்பு புலனறிவையும் கருத்துப் படிவங்களையும்  மீண்டும் செப்பனிட்டு, எண்ணங்களை முடிவுகளை- கருத்துக்களைத் தோற்றுவிக்கிறது. இவ்வாறாகப் பிராணிகளின் மனப்பாங்கிலிருந்து மனிதன் உணர்வை வேறுபடுத்திக் காட்டுகின்ற பிரதான பண்பான சிந்தனை உழைப்பு, மொழி ஆகியவற்றால் தோன்றியது.

மாமேதை லெனின்:

……………………… ……………………….தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக