ஞாயிறு, 3 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 70. வி.இ.லெனின்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 70.  வி..லெனின்.


இயக்கவியல்:


கெகலின் போதனையே இயக்கவியலின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது ;


   இயக்கவியலின் பொதுவான வடிவங்களைப் பற்றிய முழுமையான, உணர்வுப்பூரணமான சித்திரத்தை கெகல் தான் முதன்முதலாகத் தீட்டித்தந்தார் “ என்று எழுதினார் மார்க்சு.

                     ”எல்லாப் பொருள்களும் தமக்குள்ளே முரண்பாடுகளைக் கொண்டுள்ளன என்றும் இந்த முரண்பாடுதான்  எல்லா இயக்கத்திற்கும் எல்லா உயிர்த்திறனுக்கும் வேர்.  ஒவ்வொன்றும் தனக்குள்ளேயே முரண்பாடு கொண்டிருப்பதால்தான் அது இயங்குகிறது” என்பது கெகலின் இயக்கவியல். இக்கருத்தில் கருத்துமுதல் வாத தன்மை இருப்பதாக மார்க்சு,எங்கெல்சு ஏற்கவில்லை. இவர்களைப் பொறுத்தவரையில்....


” இயக்கவியல் விதிகளை இயற்கையில் நிர்மாணிப்பது என்ற பிரச்சினையே இல்லை, மாறாக அவற்றை இயற்கையில் கண்டறிவதும் அதிலிருந்து முறையாக் வெளிப்படுத்துவதுமே தேவை என்றனர். 

இதுவே...

 பொருள்முதல்வாத இயக்கவியல்:( லெனின்.)

ஒவ்வொன்றும் எல்லாவற்றுடனும் உலகளாவிய முழுமையான ஜீவாதாரத் தொடர்பு கொண்டிருக்கின்றன என்றார் லெனின். மேலதிகமாக விளக்கிய லெனின் “ இயற்கையில் நிரந்தரமாக எதுவுமே இல்லை, என்றும் வளைச்சிக் கட்டங்களின் மாற்றமே நிரந்தரமானவைஎன்றும் ஒவ்வொரு கட்டமும் சிறிது காலத்திலோ காலந்தாழ்ந்தோ முற்றிலும் வேறான ஒரு கட்டத்திற்கு வழிவிட்டு மறைந்து போகிறது என்றும் இந்த புதிய கட்டத்திற்கும் அதே கதி நேருகிறது என்றும் கூறி உலகம் எனபது பொருள்களின் சேர்க்கை அல்ல. நிகழ்ச்சிப்போக்குகள் , தொடர்புகள், உறவுகள் ஆகியவற்றின் சேர்க்கையே என்றும் எல்லாப் புலப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடுகள் இருக்கின்றன. என்றும் இந்த விஞ்ஞான அறிவு எடுத்துக்காட்டியது.


  உழைப்பே மனித அறிவுத்திறனைத் தோற்றுவித்து, புராதன மனித மந்தையை ஒழுக்க நெறி, விஞ்ஞானம், கலை ஆகியவை கொண்ட மனிதச் சமுகமாக உருமாற்றியது. உழைப்பே நம்மை மனிதப்பண்பு பெறச்செய்தது; அதுவே மனிதனின் சாரம்.

……………………………………………….தொடரும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக