திங்கள், 11 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 73. வி.இ.லெனின்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 73.  வி..லெனின்.


கார்க்கியின் கருத்து :

 

1) – முன்னோக்கி வழிநடத்து – மாறுதல் காண் – சீரமைப்பு செய் – செழுமைப்படுத்து – முழு வடிவம் கொடு.


2)  - உழைப்பே நமது நூல்களின் கதைநயகனாக இருக்கவேண்டும். அதாவது உழைப்பிலேயே உருவாக்கப்படுகிற மனிதன், பதிலாக உழைப்பை எளிதாகவும் செய்து இறுதியில் உழைப்பையே கலையாக உயர்த்துகிற மனிதன் , அத்தகைய மனிதன்தான் கதைநாயகனாக வரவேண்டும்.



இலக்கியத்தரம்:


மக்களைக் கண்முன் நிறுத்தி அவர்கள் புரிந்து, தெரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்து எளிமையாகவும் கச்சிதமாகவும் இருக்க வேண்டும். மக்களுக்குப் புரியாத  சொற்ஜால வித்தையை, பாண்டித்திய செருக்கைப் பயன்படுத்தக்கூடாது. பாட்டாளி வர்க்கத்திற்குரிய எளிய நடை என்னும் பொழுது கொச்சை, பச்சையான போக்கில் விழுந்து விடுவதோ பண்படாத வாசகங்களின் தரத்திற்கு இறங்கிவிடுவதோ அல்ல,  முறையாக உறுதியாக  மேன்மேலும் வாசகனின் தரத்தை வளர்ப்பதற்கான நடைதான் – எளிய நடை ” என்று இலக்கியப் படைப்பின் தரம் குறித்துக் கூறுகின்றார் லெனின்.

……………………… ……………………….தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக