தமிழமுது -38 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு எட்டுத்தொகை நூல்கள் :
7) .அகநானூறு:
இந்நூலில் 21 இடங்களில் முருகனைப்பற்றிய
குறிப்புகள் டம்பெற்றுள்ளன.
முருகனுக்குரிய பொதியமலை, , முருகன் பரங்குன்றம் முதலிய செய்திகளும் கடவுளை வாழ்த்தி வேண்டல், தெய்வங்களுக்குப்
பலியிடல், பிறை தொழுதல், கதிரை வணங்குதல் இன்னபிற செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
கொல்லிப்பாவை வழிபாடு :
வெல்லும் வேல், கொல்லும்படையுடைய சேரன்
கொல்லிமலை, அருவி நீர் உடைய மலையின் அகன்ற இடம் அழகுற தெய்வமாக அமைந்த கொல்லிப்பாவை
. – அககநானூறு – 62.
வெறியாட்டுக் களம் :
தாயானவள் தலைவியின் நோய் நீக்க, முதுமை வாய்ந்த பொய்கூறல்
வல்ல கட்டுவிருச்சியராகிய பெண்டிர், பிரப்பரிசியைப் பரப்பி வைத்து, இது முருகனது செயலான்
வந்த அரிய வருத்தம் என்று கூறலின் அதனை வாய்மையாகக் கருதி அத்தெய்வத்திற்குப் பூசனை
செய்தனர். அகம் – 98.
முருகன் – சேயோன்:
முருகக் கடவுள் மிக்க செந்நிறம் உடையவர்
என்பது சேய் , செவ்வேல் என்னும் பெயர்களாலும்
பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு, பவழத்தன்ன மேனி
என்பவற்றாலும் அறியப்படும். செவ்வானத்திற்கு நெடுவேளின் செம்மேனியும் அவ்வானத்தை
ஒட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கினத்திற்கு அவரது மார்பில் அணிந்த முத்தாரமும்
உவமமாயின. – அகம். 120.
எழுத்துடை நடுகல்:
நிரை மீட்ட போரில் இறந்துபட்ட
கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக்கொண்ட
நடுகல்லை வழிபட்டனர் . அகம்–131.
- மேலும் காண்க:, 179. -269, -297.
நெடியோன் முருகன் :
“ ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து. :”
–அகம் . 149.
முருகன் பரங்குன்றம், நெடியோன் முருகனை நெடியவன் என்பார் நச்சினார்க்கினியர்.
சிவனை வழிபடல் ;
நான்மறை முதுநூல் முதல்வன் முக்கண்
செல்வன் ”- உலகம் யாவும் போற்றும் நல்ல புகழை உடைய நான்கு வேதங்களைக்கண்ட பழம்பெரும்
நூலைத் தந்தருளிய மூன்று கண்களை உடைய சிவபெருமானை வழிபடும் சிறப்பினை உடையது சோழநாட்டில்
உள்ள ஆலமுற்றம் எனும் ஊர்,
திருமால் வழிபாடு :
‘நேர்கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்” –அகம்
. 175.
நிரம்பிய ஆரங்களைக்கொண்ட சக்கரப் படை யுடைய
திருமால் வழிபாடு குறிக்கப்பட்டுள்ளது.
கதிரைத் தொழுதல் :
“பயங்கெழு திருவின் பல்கதிர்
ஞாயிறு.. அகம் – 298.
உலகில் வாழும் உயிர்களுக்குப்
பயன்மிக்க செல்வத்தைத் தரும் பல கதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு
ஏதுவாகிய பலவகை தொழில்களைத் தருமாறு வலமாக எழுந்து, நீர்முக்க் கடலிலே தோன்றினாற்போல……
! வாழ்த்தி வணங்கினர் என்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக