சான்றோர்
வாய் (மை) மொழி : 100. பகுத்தறிவியல் சிந்தனைகள்.இங்கர்சால்.
R.G. INGERSOLL – 1833 -1899.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.
அறிமுகம் :
இராபர்ட்
கிரீன் இங்கர்சால், அமெரிக்கா திரிசுடன் ஊரில்
பிறந்தவர். தேர்ந்த சொற்பொழிவாளர் , ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
“ மனிதன் தன் மனத்தில் எழும் கேள்விகளுக்குத் தனக்குத் தானே பதில் அளிக்கக்
கூடிய பயிற்சியைப் பெறவேண்டும் ; மனிதன் பகுத்தறிவு படைத்தவனாக உருவாக வேண்டும்.’ என்றார்.
“மதகுருமாரிடமே
, “ஞான ஸ்னானத்தைவிட சோப்பு ஸ்னானம் சிறந்தது” என்றார். பின் வழக்கறிஞர் தொழில் பார்த்தார் ; நீக்ரோ
அடிமை ஒழிப்பில் பெரும்பங்கு கொண்டார். சிலகால அரசியல் வாழ்வில் தேர்தலில் நின்று தோல்வியுற்றார்.
தேர்தல் பரப்புரையில் ..
“
இங்கர்சால் ஒரு நாத்திகர் ; வேத நூலை நம்பாதவர்
; மதத்தைக் கேலி செய்பவர் ; அவரையா கவர்னராக்கப் போகிறீர்கள்…? அந்த நாத்திகரை நீங்கள்
தேர்ந்தெடுத்தால், ஆண்டவனின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள்,
ஆண்டவன் கோபத்தால் அண்டம் கிடுகிடுக்கும் , தொற்று நோய்கள் யாவும் பரவும் தொல்லைகள் பெருகும் நாடு அழிந்து காடாகிவிடும் நாம்
அனைவரும் மடிந்துவிடுவோம் “ … மக்கள் இங்கர்சாலைத் தோற்கடித்தனர்.
சொற்பொழிவாளர் ;
இங்கர்சாலின்
பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் அலை அலையாகத் திரண்டனர். பெரும்பொருள் கிட்டியது. அமெரிக்க
அதிபரின் வருமானத்தைப்போல் இரண்டு மடங்கு கிடைத்தது, ஆயினும் அவர் பொருளைச் சேமித்தது
கிடையாது
சொற்பொழிவின் மையக் கருத்து
:
பகுத்தறிவுச் சிந்தனை.
1). மனிதத் தன்மையின் சிறப்பு.
2), சுதந்திரத்தின் மேன்மை.
3). நீதியின் புனிதம்.
ஆதிகர்களின் அச்சுறுத்தல் அடிக்கடி நிகழந்த்து ஆயினும்
அவர் அஞ்சவில்லை. மூடபக்தியினின்றும் மோட்ச,
நரகத்தினின்றும் மனித சமுதாயத்தை விடுவிக்கப் போராடினார்.
கடவுள்கள்: தொடரும் ..............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக