சான்றோர் வாய் (மை) மொழி : 99. பகுத்தறிவியல் சிந்தனைகள்.
2–
தெசுகார்டசு – (RENE
DESCARTES
-1596 – 1650.)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.
தொடர்ச்சி
….
சிந்தனை வகைகள் :
1.)
மன உள்ளாற்றல் கொண்டு சிந்திப்பது.
2.)
மன உள்ளாற்றல் வழி உணர்ந்துகொண்ட உண்மைகளைப் பகுப்பளவைச் சிந்தனை வழி
புதிய உண்மைகளை வெளிக்கொணர்வது.
மனமே அறிவுக்கு அடிப்படை என்பது தெசுகார்டசு
முடிபு.
ஐயம் :
ஐயம், அறிவு விளக்கத்திற்குக்
கருவி. வெறும் ஐயம் வெறுமைக்கு இட்டுச் செல்லும்
வினாக்களைத் தொடுத்து விளக்கங்களைத் தேடுவது சாக்ரடீசு சிந்தனை முறை. ஐயப்பாடு என்பது
ஓர் ஆய்வு நெறி. ஐயத்தின் துணையால் அடிப்படை உண்மை காண முற்படுவது தெசுகார்ட்சு சிந்தனை
முறை.
மனத்தின் இயக்கமாகிய சிந்தனையஅனைத்திற்கும் அடிப்படை
. பட்டறிவில் அறிவு விளைவதில்லை. நான் சிந்திக்கிறேன் எனவே, நான் இருக்கிறேன் – இவர்
முடிபு.
ஒப்பு நோக்கு :
நன்மை தீமைகளை ஆராய்ந்து அறியும் ஆற்றல்தான் ஆறாவது
அறிவு “ ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே “ என்றார் தொல்காப்பியர்.
“எல்லாவற்றையும் சந்தேகப்படு ,” உண்மை அறியும் ஆற்றலுக்கு
ஐயம் துணை புரியும் என்றார் காரல் மார்க்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக