சான்றோர்
வாய் (மை) மொழி : 93. பட்டறிவியச் சிந்தனைகள். – ஜார்ஜ் பார்க்லி -G. Barkely – 1685 – 1753.- அயர்லாந்து.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.
தத்துவத்தின் தனித்துவம்
:
“சடப்பொருள் இல்லையென்றும்
பிரபஞ்சம் ஆன்மப் பொருள்களாய் ஆனதென்றும் மனத்தில் தோன்றும் எண்ணங்களைத் தவிரப் புறவுலகில்
பொருள்கள் ஏதும் இல்லையென்றும் கூறியவர்.
ஆன்மாவின்
செயற்பாடு :
1.)
எண்ணங்களை
வாங்கிக் கொள்வது = அறிதல் நிலை.
2.)
எண்ணங்களை
உருவாக்குவது = செயல் நிலை.
கடவுள் :
இயற்கை பற்றிய பூரண அறிவு மூலமாகவோ, இறைவனின் படைப்பில் உள்ள ஒழுங்கையும்
இறைவனின் வரம்பில்லா ஆற்றல்களையும் அறிய முடியும்.
கடவுள் இயற்கையின்
ஊடே பரவி நேரிடையாகவே செயல்படுகிறார்.; அவரே அனைத்திற்கும் காரணம் ; முதலும் முடிவும்
அவரே ; ஒவ்வொரு மனிதனிடமும் நேரடித் தொடர்புடையவர் ; இடைத்தரகர் தேவையில்லை.
இறைக்கோட்பாடு,
அடிப்படையில் மனித வாழ்க்கை சரணடையதல் ஆகும்” என்பது இவருடைய தத்துவமாகும்.
……………தொடரும்……….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக