வியாழன், 5 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 92 – 2. பட்டறிவியச் சிந்தனைகள். – ஜான் லாக். John Loke – 1632 – 1704.

 

சான்றோர் வாய் (மைமொழி : 92 – 2. பட்டறிவியச் சிந்தனைகள். – ஜான் லாக். John Loke – 1632 – 1704.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

                   “ பகுத்தறிவியச் சிந்தனையாளர்கள், கருத்துலகில் தம்மை ஆழ்த்திக்கொண்டு புற உலகச் சூழல்களை, நிகழ்வுகளை எண்ணவில்லை, கருத்தால் உலகைக் கண்டனர்.

                    பட்டறிவியச் சிந்தனையாளர்கள் உலகியல் கருத்துக்களைக் கண்டனர்;  புற உலகு – சமுகம், இயற்கை அன்றாட அனுபவம் அறிவு, செயல் ஆகியனபற்றிச் சிந்தித்தனர்.       

      ஜான் லாக், எண்ணங்கள் இருவகையின என்பார்.

1.)     தனிம எண்ணங்கள் : அ,) புலக்காட்சி, ஆ). மனக் காட்சி.

2.). கலப்பு எண்ணங்கள் : தனிம எண்ணங்கள் + சிந்தனை உத்திகள் = ஆயிரமாயிரம் கலப்பு எண்ணங்களை உருவாக்கல்.

 ஆன்மா:

                        உணர்வுத் தொகுப்பே ஆன்மா ; சிந்தனை, அறிதல், உணர்தல், செயல், ஆர்றல் எனப் பல செயல்கள் மனத்தில் நிகழ்கின்றன. இச்செயல்களைத் தாங்கி நிற்கும் செறிபொருளாக ஆன்மா கருதப்படுகிறது. நம் சிந்தனை எவ்வளவு ஆழம் செலுத்தினாலும் உணர்வுகளின் தொகுப்பைத்தவிர அவற்றைத் தாங்கி நிற்கும் ஆன்மாவைக் காணமுடிவதில்லை.

அறிவு :

                    பொருள்களோடு ஐம்புல உணர்வுகளே மனிதனுடைய அறிவின் எல்லை , அதற்கப்பால் மனிதனால் எதையும் செய்ய இயலாது.

 வாழ்க்கை :

             இன்பமும் துன்பமும் உலகியல் வாழ்வை மதிப்பீடு செய்யும் அளவுகோல். துன்பத்தைத் தவிர்க்க – நலமான உடல், சமுக மதிப்பு, அறிவு முதிர்ச்சி, நிறைவு தரும்  அனபுச் செயல்கள், உலகியலுக்கு அப்பாலும் இன்பத்தை எதிர் நோக்கல் ஆகிய ஐந்தும் நற்பண்புகள்.

வழிபாடு :

                   ஆரவார வழிபாடுகள், சடங்குகள் ஆகியவற்றால் தனி மனிதனுக்கோ சமுகத்திற்கோ பயனேதும் விளைவதில்லை.

அரசியல்: ரூசோ:

                 மனித சமத்துவம், உரிமை ஆகியன மனிதன் இயற்கை வாழ்வு நடத்தியபோதே தோன்றியவை. மனிதன் உருவாக்கிக்கொள்ளும் சமுக அரசியல் அமைப்புகள் யாவும் மனிதனின் இவ்வடிப்படை உரிமைகளைக் காப்பதற்குப் பயன்பட வேண்டும். மனிதன் இயற்கையிலேயே  உடையவன் என்கிறார் ரூசோ.

             மனிதன் இயல்பிலேயே சுயநலமும் பழிவாங்கும் உணர்வும் கொண்டவன் என்கிறார் ஜான் லாக்.

……………தொடரும்……….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக