சான்றோர் வாய் (மை) மொழி :
97. பட்டறிவியச் சிந்தனைகள். -2- ஜீன் பால்
சார்த்ரே (Jean Paul Sartre -1905 – 1980. ) (1946; Existentialism and Humanism).
”மொழி, இனம் என்பனவெல்லாம் மனிதனை அடிமைப்படுத்துவன.
நான் என்னவாக இருக்கிறேன் ; என்னவாக மாறிக்கொண்டிருக்கிறேன் எனும் எண்ணங்களால்தான்
மனிதன் இருப்புநிலை சிறப்படைய முடியும்.” என்கிறார்.
பிளாட்டோ முதல் காண்ட் வரையிலான கடந்த காலத் தத்துவங்கள்
மனிதனை நாடக மேடை நடிகனாகக் கருதின. இந்நிலையை அடிமைச் சமுதாயக் கோட்பாடு” என்கிறார்.
படைப்பாற்றல் மனித உரிமையின் இயல்பு. மனிதன் வாழ்க்கைக்கும் வாழ்க்கை
மாற்றத்திற்கும் வேண்டிய பழக்க வழக்கங்களையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தான் விரும்பும்
வண்ணம் தானே உருவாக்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ உரிமையுண்டு ; பிறரால் உருவாக்கப்பட்டுத்
திணிக்கப்படும் எதையும் மனிதன் ஏற்கக்கூடாது ; எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டும்.
இறுதியாக :
இருப்புநிலை இழந்து (அடிமையாக) வாழ்வதைவிட உரிமையோடு தன் இருப்பு நிலையை உணர்த்தி இறப்பது மேல்.” என்று மனித வாழ்வின் மேன்மைக்கும் மதிப்புக்கும் உரத்துக் குரல் கொடுக்கிறார்.
…………………..தொடரும்………………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக