சான்றோர்
வாய் (மை) மொழி : 107. பகுத்தறிவியல் சிந்தனைகள். காட்ஃபிரைட் லீப்னிஸின்
The
Monadology (1714), by Gottfried Wilhelm LEIBNIZ (1646-1716)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423
. The Monad logy is one of Gottfried Leibniz's best known works
of his later philosophy. It is a short text which presents, in some 90
paragraphs, a metaphysics of simple substances, or monads. Wikipedia
Translated
by Google
விளக்கம்
மோனாடாலஜி
என்பது காட்ஃபிரைட் லீப்னிஸின் பிற்கால தத்துவத்தின் சிறந்த அறியப்பட்ட
படைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு குறுகிய உரையாகும், இது சுமார் 90 பத்திகளில், எளிய
பொருட்கள் அல்லது மோனாட்களின் மெட்டாபிசிக்ஸை வழங்குகிறது. விக்கிப்பீடியா.
லீப்னிஸ் :
இவர் தந்தை ஒரு தத்துவப்
பேராசிரியர். இவரோ கல்வித் தேர்ச்சி – சிந்தனை அறிவு – தத்துவம் – அளவையியல் – கணிதம்
– சட்டம் – சமயம் முதலிய பலதுறைகளில் சிறந்து விளங்கியவர். சமயச் சடங்கு, ஆலய வழிபாடுகளில்
நம்பிக்கையற்றவர்.
1.)
தனிப்பொருள் உண்மை.
2.)
நோக்கமுடைய பிரபஞ்ச இயக்கம்.
3.)
அறஞ்சார்ந்த வாழ்க்கை.
4.)
உலகியல் இன்ப துன்பங்கள். ஆகிய நிலைகளில் நின்று
சிந்தித்தார்.
செறிபொருளின்
அடிப்படைப் பண்பு ஆற்றலே அன்றிப் பரப்புடைமை ஆகாது. ஆற்றலே அனைத்திற்கும் பிறப்பிடம்.
ஆற்றலை மையமாக உடைய தனிமங்களை மொனாடுகள் Monado) எனக் குறிப்பிட்டார்.
எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆர்றல் கூறுகள்
மொனாடுகளால் ஆனது, ஒவ்வொரு மொனாடும் ஒரு செறிபொருளாகிறது.
மொனாடுகள் தனித்தியங்கும் ஆற்றல் உடையவை. பிறவற்றைப்
பாதிப்பதில்லை ; பிறவற்றால் பாதிக்கப்படுவதும் இல்லை. செறிபொருள் கடவுள் இயற்கை என்ற
பொது உண்மைகளில் கரைந்துபோன மனிதனை, லீப்னிஸ் தனித்தியங்கும் தனிமமாக்கி முதன்மைப்
பெறச்செய்தார்.
பகுதி 2. ….தொடரும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக