வியாழன், 6 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 142. அறிவியல் சிந்தனைகள் - மார்க்சீயம் – மதம் – கடவுள்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 142. அறிவியல்

சிந்தனைகள்  - மார்க்சீயம்மதம்கடவுள்.

மதம் என்பது தன்னைத் தானே அறிந்துகொள்ளாத் அன்றேல் தன்னை மீண்டும் இழந்துவிட்ட மனிதனின் சுயபிரக்ஞையும் சுய உணர்வுமாகும்.. ஆனால் மனிதன் என்போன் இந்த உலகத்துக்கு அப்பாலே குந்தியிருக்கும் ஒரு கருத்துப் பொருளன்று. மனிதன் என்பது மனிதனின் உலகமே, அரசு;  சமுகம் தான் மனிதன். இந்த அரசு, இந்தச் சமுகம் மதத்தை உண்டாக்குகிறது. மதம் என்பது மறுதலையான (தலைகீழான) உலகப் பிரக்ஞையாகும். ஏனெனில் மதத்தில் தலை கீழான ஒரு உலகமே காணப்படுகிறது. மதம் அந்த உலகில் பொதுக்கொள்கையாகும்.  மதம் மக்களின் அபின் .

 

மதம் அவலம் (அதாவது மதத்தில் இடம் பெறும் ஆத்ம அவலம் ) என்பது ஒரு வேளையில் உண்மையான அவலத்தின் வெளிப்படையாகவும் ; அந்த உண்மையான அவலத்துக்கு எதிரான எதிர்ப்பாகவும் அமைகின்றது. மதம் என்பது ஆத்ம உயிர்ப்பற்ற ஒரு நிலைமையின் உயிர்ப்பாக இருப்பது போல் ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெரு மூச்சாக இதயமற்ற உலகில் இதயமாக உள்ளது .” . – காரல் மார்க்சு. ……………………..தொடரும்……………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக