சான்றோர் வாய் (மை) மொழி : 150. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . விஞ்ஞானத்தின் விளைவுகள் :
அறிவியல் துறைகள் பலவும் தனித்து இயங்குவதால் மனித சமுதாயம் வெகுவாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்குத் தேவையான காற்றும் நீரும் மாசுண்டதால் உயிரினங்கள் அனைத்தும் அழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன.
பசுமைப் புரட்சிக்குப் பயன்பட்ட பூச்சிக்கொல்லிகள் இன்று தடை செய்யப்பட்டுள்ளன.
“ மேற்கு நாடுகளில்
நாம் சந்திக்கும் பெரிய பிரச்சனை விஞ்ஞானத்தைப்பற்றி ஏற்பட்டிருக்கும் பொதுவான ஏமாற்றமே.
அங்கே விஞ்ஞான எதிர்ப்பு இயக்கங்கூட ஏற்பட்டு வருகிறது.” என்று கூறுகின்றார் யுராப்.
”
விஞ்ஞான வளர்ச்சி உயிர் மண்டலத்தின் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டுதான் விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டும். என்பது இப்பொழுது
தெலிவாகின்றது. மனிதனையும் இயற்கையையும் ஒன்று சேர்ப்பதில் புதிய வாய்ப்புகளையும் வடிவங்களையும்
விஞ்ஞானம் கண்டுபிடிக்க வேண்டும்.” என்கிறார் இ. நோவிக்.
விஞ்ஞானம் ஏற்படுத்தும் புறக்கேடுகளும் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் அகக் கேடுகளும்
இன்று விஞ்ஞானிகள் முன்னுள்ள சவால்களாகும்.
” இயற்கைக்கு எதிராக மனிதர்கள் அடைந்திருக்கும் வெற்றிகளுக்கு
நாம் நம்மை மிகவும் அதிகம் பாராட்டிக் கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட ஒவ்வொரு வெற்றிக்கும்
இயற்கை நம்மைப் பழி வாங்கி வருகிறது. முதல் கட்டத்தில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த
விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே.
ஆனால், இரண்டாவது, மூன்றாவது கட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட., நாம் எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகின்றன.. முதல் கட்டத்தில்
ஏற்பட்ட வெற்றியை அவை பெரும்பாலும் ரத்து செய்துவிடுகின்றன.” என்ற எங்கெல்சின் கூற்று
சிந்தித்தற்குரியது.
“அறிவு , மரணம் இவை இரண்டனுள் ஒன்றை இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாக
நாம் உறுதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் மனிதகுலம் மரணத்தையே தேர்ந்தெடுக்கும் என்று
எனக்குத் தோன்றுகிறது, எனது எண்ணம் தவறாயிருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை .”
–ரஸல்.
“ விஞ்ஞானம் என்னும் அழியா சோதி அறியாமை என்னும் திரைக்குப்
பின்னே பிரகாசிக்கிறது.” என்ற காரல் மார்க்சின் கூற்று விஞ்ஞானப் பயன்பாட்டின் எதிர்விளைவுகளைச்
சுட்டிக்காட்டுகிறது.
…………………..தொடரும்……………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக