சான்றோர் வாய் (மை) மொழி : 158. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும்
வீழ்ச்சியும்.
சிக்மெண்ட் பிராய்டு – 1856 -1939.
1856 மே 6ஆன் நாள் செக்கோஸ்லாவாகிய நாட்டில் பிறந்தார். இந்த இளஞனைச் சிந்திக்கத்
தூண்டிய பொன்மொழி - “ உலகின் இரகசியங்கள் எல்லாம் இயற்கையில்தான் அடங்கியிருக்கின்றன
; இயற்கையின் இரகசியங்களை அறிவதுதான் அறிவின்
வேலை. “. இதனால் அவர் விஞ்ஞானம் கற்றார் ;
நரம்பியல் மருத்துவரானார்.
மனிதன் எதனால் சிந்திக்கிறான் ? சிந்திக்கவும் உனரவும் அவனால் எப்படி
முடிகிறது ? மனம் என்பது என்ன ..? இவ்வினாக்களைத்
தம் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து விடைகளைக்
கண்டறிந்தார்.
கனவுகளின் உட்பொருள் விளக்கம் : (The Interpretation of Dreams.)
கனவுகளைப் பற்றிய மூடநம்பிக்கைகளை பிராய்டு தகர்த்தெறிந்தார். தூங்கும் மனம் தன் நினைவுகளைப்
படமாக்கிப் பார்க்கிறதே அதுதான் கனவு. படமாக்குவதும் பார்ப்பதும் மனம் தான்.
மனித மனத்தில் உண்டாகி நிறைவேறாத நிலையில் நின்றுவிடும் ஆசைகளைக்
கனவிலாவது நிறைவேற்றிக்கொள்வதற்காகத்தான் மனிதர்கள் கனவு காண்கிறார்கள்.
1. விருப்பக் கனவுகள்- (Wish Fulfilment
Dreams)
2. அச்சம் / கவலை – (Anxiety Dreams)
3. துன்பக் கனவுகள் – (Punishment Dreams)
விலங்குணர்ச்சியும்
பண்பாட்டுணர்ச்சியும்
(ID
– Ego)- தன் முனைப்பு.
இயற்கையில் இருக்கும் மனிதனின் விலங்குணர்ச்சி உயர்வழிப்படுத்தப்பட்டு
(Sublimation) பண்பாட்டுணர்ச்சி வளர்கிறது.
மற்றவனைக் கொல்லத் துடிப்பது (கோபம்) விலங்குணர்ச்சி ; அவனை மன்னித்து விடுவது பண்பாட்டுணர்ச்சி.
விலங்குணர்ச்சி உயர்வழிப்படுத்தப்படுவதற்கு
காரணம் மனசாட்சி (Super Ego) மனசாட்சி என்பது
மனிதனின் பண்பாட்டுணர்ச்சியின் வளர்ச்சி அடைந்த பகுதிதான்.
பெரிய
கவிஞர்கள், விஞ்ஞான மேதைகள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் எல்லாரும் இவ்வாறு பலமான விலங்குணர்ச்சி ‘உயர்வழிப்பட்டதால்’ உண்டானவர்களே. அதே சமயம் பயங்கர
குற்றவாளிகளும் பைத்தியக்காரர்களும் இந்த மாதிரியான கொடுமையான விலங்குணர்ச்சிக்கு ஆளானவர்கள் தான், என்கிறார் பிராய்டு.
ஒரு தனி மனிதனின் விலங்குணர்ச்சி இன்னொரு தனி மனிதனையும்
; ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தமான விலங்குணர்ச்சி இன்னொரு சமுதாயத்தையும் அழித்துவிடும்.
……………………………………மேலும்
தொடரும் …..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக