புதன், 12 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 148. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி .

 

சான்றோர் வாய் (மைமொழி : 148. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .

 

ஹோமர் – கி.மு. 700.

இவர் கவிதைகளில் இடம்பெற்றிருந்த அறிவியல் கருத்துகள், பின் தோன்றிய கிரேக்க அறிவியல் சிந்தனைகளுக்கு  அடிப்படையாக அமைந்ததென்பர்

 தொல்காப்பியர்- கி.மு. 711.

 இவர் இயற்றிய தொல்காப்பியம் தமிழின்  முதல் இலக்கணமும் இலக்கியமுமாகும். எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. தொல்காப்பியர் எழுத்தில்  ஒரு மொழியியல் விஞ்ஞானியாக ;  பொருளில் – ஒரு சமுகவியல் விஞ்ஞானியாக ; மரபியலில் – ஓர் உயிரியல் விஞ்ஞானியாக விளங்குகிறார்.

உயிர்களில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை உலகுக்கு வழங்கிய   சி. ஆர். டார்வினுக்கு (Charles Robert Darwin – 1809 – 1882.) ஆய்வு முன்னோடி தொல்காப்பியரே .  தொல்காபியர் கோட்பாடுகளைப் பின்னாளில் இரசிய விஞ்ஞானி  சேச்னோவ் (Sechano -1829 – 1905.) பிராணிகளின் புலன் உணர்வுகள் குறித்த  விஞ்ஞானத்தில் விளக்கங் கண்டார்.

 

கி.பி. முதல் நூற்றாண்டில் தோன்றிய சங்க இலக்கியங்களில்  உள்ள அறிவியல் சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை.  புறநானூறு கூறும்  ஐம்பெரும்பூததியற்கையும், செஞ்ஞாயிற்றுச் செலவைக் குறிப்பிடும் (புறம்.30) பாடலும் . மேலும் அறிய (பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் எனும் என்நூலினை அமேசான் கிண்டில் காணவும் )  வள்ளுவர் கூறும் ‘சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம் ‘ எனக்கூறும் குறளும் அறிவியல் சிந்தனை விருந்தன்றோ..!

 

  லியானர் டாவின்சி (Leonardo Da Vinch -1452 -1519.) என்ற புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த பல ஓவியங்கள் பின்னாளில் அறிவியல் கண்டுபிடிப்புகளாக உருவாயின.

 பிரான்சிஸ் காட்வின் -: 1658இல் எழுதிய ’சந்திரனில் மனிதன்’ என்னும் நாவல் , 1969இல்  நிலவில் மனிதன் காலடி வைத்ததன் மூலம் மெய்யானது.

எச்.ஜி. வெல்ஸ் : - (H.G. Wells – 1866 – 1946. )ஒரு சிறந்த நாவலாசிரியர். இவரின் அறிவியல் கற்பனைகள் அறிவியல் வழி மெய்ப்பிக்கப்பட்டன.

 இ.காண்ட்: (I. Kont- 1724 – 1804.) இவர் செர்மானிய தத்துவ மேதை, இவர் 1775இல் முவைத்த சீரிய மண்டலம் குறித்த கருதுகோள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் கணிதவியல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

பாரதியார்; 1882 -1921. இவர் “சந்திர மண்டிலம் கண்டு தெளிவோம்”  என்று 1916இல் பாடியது, 1961இல் இரசிய விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப்பட்டது.

 

அறிவியலில் கலை:

…………………..தொடரும்……………….

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக