சான்றோர் வாய் (மை) மொழி :
153. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல்
புரட்சி . எழுச்சியும்
வீழ்ச்சியும்.
சர் ஐசக் நியூட்டன்:
1643 – 1727.
நியூட்டன் இங்கிலாந்து நாட்டவர், இவர் கூறிய தத்துவச்
சிந்தனைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.
கோப்பர் நிக்கசு,கெப்லர், கலிலியோ முதலியோருக்கு இருந்த மத இடையூறுகள் இவருக்கு இல்லை. இவருடைய அறிவியல் எழுச்சி, சிந்தனையாளர்களை அனுபவ உலகை
நோக்கித் தள்ளின. எங்கும்
உள்ள ஈர்ப்புவிசை இயக்கம் பற்றித் தந்த விளக்கம் புதிய ஆய்வுகள் தோன்றவும் கண்டுபிடிப்புகள் பெருகவும் உதவின. இதனால் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது ; நாகரிக வளர்ச்சி
மேம்பட்டது.
நியூட்டன் முப்பட்டைக் கண்ணாடியை ஆய்ந்து ஒளியின் நுட்பத்தை விளக்கினார்.
வானவில் என்பது சூரியனின் ஒளிக்கற்றை என்பதையும் நமக்குக் கிடைக்கும்
வெண்மையான ஒளி அக்கலவைகளின் தொகுபுத்தான் என்று மெய்ப்பித்தார்.
நியூட்டன் ஆப்பிள்
மரத்தடியில் அமர்ந்திருந்தபொழுது ஆப்பிள் பழம் ஒன்று பூமியில் விழுவதைக் கண்னுற்றார்.
“அப்பழம் பூமியில் ஏன் விழவேண்டும்”? என்ற கேள்வியைத் ‘தன் மனதுள்’ கேட்டுக்கொண்டார். அக்கேள்வியின்
விளைவு அவர் சிந்தனையைத் தூண்டி புவி ஈர்ப்பு விதியைக் கண்டுபிடித்தது. பூமி மட்டுமின்றி வானத்தில் காணப்படும்
எல்லாக் கோள்களும் அவ்வகை ஈர்ப்புச் சக்தியைத் தம்மிடத்தே கொண்டுள்ளன என்பதால் நியூட்டனின்
விதி எல்லாக் கோள்களுக்கும் பொதுவானதாக உள்ளது. இயற்கை தனக்குத்தானே
அமைத்துக்கொண்டுள்ள விதியைக் கண்டுபிடித்து நியூட்டன் விளக்கிய பின்பு ; நுண்கணித விதி ஒன்றையும் கண்டுபிடித்து, அக்கணித விதியின்படி
கோள்களின் இருப்பிடம், சுழற்சி, வேகம்,
காலம் யாவையும் கண்டுபிடிக்கும் வழியையும் உலகுக்கு விளக்கினார்.
இவர்
விளக்கிய நுண்கானித விதிப்படி விஞ்ஞானிகள் கோள்களை ஆராய்ந்து ஆங்குள்ள கண்டு தெளியாத கோள்களையும் காணத்துவங்கினர்.
வானியல் வல்லுனர்களுக்கு நியூட்டனின் வழி பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு
உதவியாயிருந்தது. ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,
000. மைல்கள் எனக் கணக்கிடப்பட்டது. இவ்வாறு ஒளியின்
வேகம் கண்ட பின்பு எல்லாக்கோள்களிலும் உள்ள இரகசியக் கதவுகள் எல்லாம் திறந்துகொண்டன..
………………………..தொடரும் ……………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக