சான்றோர் வாய் (மை) மொழி : 151. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.
அறிவியல் புரட்சி :
கோப்பர் நிகசு, கலிலியோ, கெப்லர்,
நியூட்டன்.
கோப்பர் நிகசு :1474 – 1543.
தாலமி வகுத்த புவிமைய பிரபஞ்ச கோட்பாடு - பூமியை மையமாகக்
கொண்டு பிரபஞ்சத்தின் பிற கோள்கள் இயங்குகின்றன என்றார். கோப்பர் நிகசு தாலமியின் கருத்தை மறுத்தர்.
போலந்து நாட்டுக்காரர். ரோமில் கணித பேராசிரியராகப் பணியாற்றினார். தாய்நாட்டில்
வானியல் ஆய்வுக்கூடம் அமைத்தார். சூரியனை மையமாகக் கொண்டு இப்பிரபஞ்சம் இயங்குகிறது என்றார்.
பிற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன ; பூமி
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்றார். இவர் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகள்
மத கருத்திற்கு எதிரானதாக
இருந்தது, மதத்தலைவர்களுக்கும் அவர்கள் தரும் தண்டனைகளுக்கும்
அஞ்சி, ஆய்வு நூலை வெளியிடாது வைத்திருந்தார். இவர் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்கித் தனது 70ஆவது பிறந்தநாளைக்
கொண்டாடியபோது ஆய்வு நூலை வெளியிட இசைவளித்தார். அந்நூல் அச்சாகி வெளிவர, அந்நூலினைக்
கையில் பற்றியவுடன் பெரு மகிழ்ச்சிகொண்ட
கோப்பர் நிகசு அப்பொழுதே மரணமானார்.
கலிலியோ : 1564 – 1643.
கலிலியோ தன் இளமைப் பருவத்திலேயே நீரின் கன அழுத்தக் கருவியைச் செய்துகாட்டி ‘நவீன ஆர்க்கிமிடீசு’ என்ற பெயரைப் பெற்றார். மருத்துவத்துறைக்குப் பயன்படும்
நாடித்துடிப்புக் கருவியைக் கண்டுபிடித்தார். அரிசுடாட்டில் என்ற கிரேக்க தத்துவ
மேதையின் முடிவுகள் பலவற்றைத் தவறு என்று மெய்ப்பித்துக்காட்டினார்.
இவ்வகைச் செயலை வெற்றிகரமாகச் செய்த கலிலியோவை, பைசா நகரத்து மக்கள் நாடு கடத்தித் தங்கள் நல்லறிவைப்பறைசாற்றிக்கொண்டனர்.
கலிலியோ பாதுவா நகரம் சேர்ந்தார். 1602 இல் காற்று
வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
1609 ஆம்
ஆண்டில், கலிலியோ, மறைந்த விஞ்ஞானி கோப்பர்நிகசின்
கருத்துகளை தீவிரமாக ஆராய்ந்தார். ஆய்வின் முடிவில் உலகின் முதல் தொலைநோக்கியை உருவாக்கினார்.
இதுவரை மனிதன் தன் ஊகத்தால் கூறியவற்றையெல்லாம் கலிலியோ தன் கண்களால்
நேரிடையாகப் பார்த்தார். சந்திரனைப்பார்த்தார்; சந்திரனில் உள்ள மலைகளையும் ஆழமான
பள்ளங்களையும் பார்வையிட்டார். வியாழனின் துணைக்கோள்களைப் பார்த்தார்.
சனிக் கோள்களைப் பார்த்தார். வெள்ளிக்கோள் சூரியனைச்
சுற்றி வரும்போது அவ்வெள்ளியில் தோன்றும் மாறுபாடுகளைக் கண்டார். சூரியனில் ஆணப்படும் புள்ளிகளை ஆராய்ந்தார். தனது ஆய்வு முடிவுகளை “ இருமுக்கியமான உலக அமைப்புக் கொள்கைகள் பற்றிய உரையாடல் ‘” எனப் பெயரிட்டு வெளியிட்டார்.
இவருடைய
ஆய்வால் உலக மக்களும் அறிவை நோக்கி வலம்வரத் துவங்கினர்.
அறியாமையை முதலீடாகக் கொண்ட மதவாதிகள் கலிலியோவின்
கைகளில் விலங்கினை மாட்டி 70 வயது நெருங்கிய அவரை உரோம நகரின் தெருக்களிலே வலம் வரச் செய்தனர். அவரை நீதி
மன்றத்தில் நிறுத்தினர்.
மாபெரும் மேதை கலிலியோ, ஆட்சியாளர்கள் மீது கொண்ட அச்சத்தால் ; மதவாதிகளின் கூர்வாளுக்கு அஞ்சி அப்போதைக்கு தன் கருத்தை மாற்றிக்கொண்டு
மன்னிப்பு வேண்டினார் என்று அவர்தம் வரலாறு கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக