புதன், 26 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 160 அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும். கும்பமேளா..

 

சான்றோர் வாய் (மைமொழி : 160 அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

கும்பமேளா..

(கிண்ணத் திருவிழா) (Kumbh Mela) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். இந்தியாவின் அலகாபாத்அரித்வார்உச்சைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் இவ்விழா நடைபெறும்.

திரிவேணி சங்கமம்:

திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்குப் புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) நடைபெறுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண) கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது. பன்னிரண்டாவது முழு (பூர்ண) கும்பமேளா அதாவது 144 ( 12 X 12 ) ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிக அளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.

வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களில் விழுந்தன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.

 

மகாகும்பமேளா:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் மகா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. வருகின்ற பிப்ரவரி 26-ஆம் தேதி இந்த நிகழ்வு இன்றுடன் நிறைவடைகிறது.

 

 கும்பமேளா முடிவதற்குள்,   இச்சூழலில் கங்கையும், யமுனா நதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள நீரின் தூய்மை குறித்து இரண்டுவிதமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(சி.பி.சி.பி), தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மகா கும்பமேளாவில் மக்கள் புனித நீராடும் நீரின் தூய்மை குறித்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

கங்கை-யமுனை நதியின் நீரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பல மடங்கு அதிகமான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி அன்று உத்தரபிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் முடிவுகள் சி.பி.சி.பி.யின் நீர் தரம் தொடர்பான அறிக்கை முடிவுகளை நிராகரித்தது.

அறிவியல் எழுச்சி :

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை கூறுவது என்ன?

்ரீங்காவேர்பூர் படித்துறை, லார்ட் கர்சன் பாலம், நாகவாசுகி கோவில், திஹா படித்துறை, நைனி பாலம், மற்றும் கங்கை - யமுனா ஒன்று சேரும் இடமான திரிவேணி சங்கம் உள்ளிட்ட இடங்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியது.

ஜனவரி 13-ஆம் தேதி அன்று கங்கை நதி மேல் அமைந்திருக்கும் திஹா படித்துறை மற்றும் யமுனா நதியின் நைனி பாலத்தின் அருகே இருந்து எடுக்கப்பட்ட 100 மில்லி லிட்டர் நீரில் 33,000 எம்.பி.என் (தண்ணீரில் உள்ள பாக்டீயாக்களின் செறிவை அளவிடும் முறை) அளவுக்கு கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருந்தன.

்ரீங்காவேர்பூர் படித்துறையில் இதன் அளவு 23,000 ஆக இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 100 மி.லி. நீரில் 2500 என்ற அளவில் எம்.பி.என். இருந்தால் மட்டுமே அது குளிப்பதற்கு பாதுகாப்பான நீர் என்று அறிவிக்கிறது.

காலையிலும் மாலையிலும் திரிவேணி சங்கமத்தில் தான் பெரும்பாலான மக்கள் புனித நீராடுகின்றனர். அங்கே இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் 13,000 எம்.பி.என். என்ற அளவில் உள்ளது.

கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி அந்த நீரில் பல மாசுக்கள் கலந்திருப்பதால் அது குளிக்கவும் குடிக்கவும் தகுதியற்ற நீராக குறிப்பிட்டிருந்தது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

அதிகப்படியான மக்கள் அங்கே குளிக்கின்றனர். அவர்களின் உடல் மற்றும் துணிகளில் இருந்தும் அசுத்தங்கள் வெளியேறுவதால் அங்கே உள்ள நீரில் இந்த பாக்டீரியாக்களின் செறிவு அதிகரிக்கிறது என்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்திருந்தது.

 

அறிவியல் வீழ்ச்சி:

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது என்ன?

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை வெளியான பிறகு இது அரசியல் தளத்தில் இது பேசுபொருளானது. உத்தரபிரதேச அரசு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தது.

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி, அந்த மாநில சட்டமன்றத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று அறிக்கையை முழுமையாக நிராகரித்தது மட்டுமின்றி, திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று கூறினார்.

"நீரின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சங்கமத்தைச் சுற்றியுள்ள அனைத்து கால்வாய்களும் கண்காணிக்கப்படுகின்றன. நீர் முழுமையாக சுத்தகரிக்கப்படுகிறது. மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ச்சியாக நீரின் தரத்தை மதிப்பீடு செய்து வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.

பிரயாக்ராஜில் 100 மி.லி நீரில் 2500க்கும் குறைவான அளவிலேயே கோலிஃபார்கள் இருப்பதாக தெரிவித்தார். மகா கும்பமேளாவின் நன்மதிப்பை சிதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனின் அளவு 3-க்கும் குறைவான அளவே இருந்தால் போதும். ஆனால் சங்கமம் பகுதியில் அதன் அளவு 8-9 ஆக இருக்கிறது. எனவே சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று தெரிவித்தார் யோகி.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்,"பாஜகவை சேர்ந்த தலைவர்கள் அந்த நீரை குடித்து, அதில் குளித்தால் மட்டுமே கங்கை சுத்தமாக உள்ளது என்று நாங்கள் நம்புவோம்," என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேச சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சிவ்பால் சிங் யாதவ், "இந்த நிகழ்வின் மையமாக கங்கை நதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நதியின் நீர் குடிக்க உகந்ததாக இல்லை. அரசு அந்த கங்கை நதி நீரைக் கையில் எடுத்து உண்மையைப் பேச வேண்டும்," என்று கூறினார்.(விக்கிப்பீடியா, கட்டுரைச் சுருக்கம்)

 

எவ்வகையிலும் மக்களைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. வயதானவர்களும், பெண்களும் குழந்தைகளும் இன்றுவரை புனித நீராடிவருகின்றனர்.  இத்திருவிழா இன்றுடன் நிறைவுறும் நிலையில் 63 கோடி மக்கள் நீராடிப் பாவங்களைத் தொலைத்துப் புனிதம் அடைந்துள்ளனர் என்று ஊடகம் அறிவிக்கிறது.

உலகம் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளபோதும் மதம் அறிவியலைப் புறந்தள்ளிவிடுகிறது.

 

‘புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையான் காணப் படும் .” 298.  எனப் புனித நீராடல் குறித்த வள்ளுவரின் அறிவியல் சிந்தனையை மனங்கொண்டு வாழ்வோமாக….!

…………………………………தொடரும் ………………………..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக