சான்றோர் வாய் (மை) மொழி :
159 அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும்
வீழ்ச்சியும்.
ஆண் பெண் பாலுணர்ச்சிக்கு மூன்று விளக்கங்கள்.
(Three Contributions to the theory of Sex.)
பாலுணர்ச்சி
என்பது பிறந்த குழந்தையிடமே இருக்கிறது. குழந்தை வளரும்போது அதுவும் பல பருவங்களாக வளர்ச்சி அடைகிறது.
மனிதனாகிய பருவ வயது அடைந்ததும் பாலுணர்ச்சி முதிர்ச்சி அடைந்து இனவிருத்திக்குத் தயாராகிறது.
ஆண் குழந்தை தன் தாயிடத்திலும் பெண்குழந்தை தன் தந்தையிடத்திலும் கொள்ளும்
இந்த அன்புணர்ச்சியே பின்னால் பருவ காலத்தில் ஏற்படும் காதல் உணர்ச்சிக்கு முதற்படியாகிறது.
பெற்றோரிடம் இத்தகைய அன்பைப் பெறாத குழந்தைகள் பின்னாளில் வாழ்க்கையில்
விரக்தி அடைந்தவர்களாக ஆகின்றனர்.
ஆணிடம் இனவிருத்தி சக்தி அதிகமாகும்போது காதல் உண்டாகிறது. போகப்போகக் குறைந்துவிடுகிறது. உடல்
உள்ளுறுப்புகள் மாறுதலும் வளர்ச்சியும் காதலுக்குக் காரணம். ஆயின்
மனோதத்துவத்தில் மனத்தின் காதல் வேட்கையும் காம உணர்ச்சிக்கு ஆதாரமாகிறது. மனம் தன்னை அறியும் பருவத்திற்கு வளர்ச்சி அடைந்ததும் ஏதாவது ஒரு பொருளை
( Object ) மையமாகக் கொண்டு தன் உணர்ச்சிகளைச்
சுற்றிப் படரச் செய்கிறது. காதல் மோகத்திற்காகத் தன்னைத்தானே
வருத்திக்கொள்வது மாசோகிசம் (Masochism) . தான் காதல்
கொண்டவரைத்
துன்புறுத்தல்
சேடிசம் (Sadism).
இனக்கூட்டமும் இறைமை அச்சமும் (தீட்டும்)
(Totem and Taboo )
தீட்டுகளின் பெயரால் இதைச் செய்யக்கூடாது; அதைச் செய்யக்கூடாது ; சில வார்த்தைகளைச் சொல்லக்கூடாது
; சில பொருள்களைத் தொடக்கூடாது என்று தடைகளின்
மூலமாகவே பழங்காலச் சமுதாயத்தில் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் நிலை நிறுத்தப்பட்டன. இம்மாதிரியான தீட்டுகள் தாம்
(அரசர், மத குருமார்) சமுதாயச்
சட்டங்கள், பழக்க வழக்கங்களாயின.
வாழ்க்கையின் ஒரு தத்துவம் (A Philosophy of Life)
மனிதனின் அறிவுணர்ச்சிகளோடு தொடர்புடையவை மதம், தத்துவம்,
விஞ்ஞானம் ஆகியன.
மதமும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று நேர் மாறானவை.
மதம் மனித இனத்தில் மிகுந்த செல்வாக்குடையது.
உலகில்
இரண்டு விஞ்ஞானங்கள்-
1. மனோ தத்துவ விஞ்ஞானம்
2. இயற்கை பற்றிய விஞ்ஞானம்.
அறிவியல் புரட்சி - வீழ்ச்சி ;
பழங்காலத்தில் மனநலம் இழந்தோரைப் பிசாசு, பேய் பிடித்துக் கொண்டதாகக் கருதி
அதற்கான மாய மந்திரங்களையெல்லாம் செய்துவந்தனர். மந்திரத்தால் நோயும் பிணியும் நீக்கும் வித்தைகள் இன்றுங்கூட நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் மருத்துவமனைகளுக்கும் பஞ்சமில்லை. தெய்வக் குறையால் வந்ததெனக் கருதும் நோயாளிகளில்
பெரும்பாலோர் மன நோயாளிகளே. மனநலம் இழந்தோரின் பிறழ்நிலை நடத்தைக்குப் (Abnormal Behavior ) பில்லி. சூனியம், செய்வினை காரணமெனக்கூறிச்
சாமியார்கள் ஆட்டம் போடுவர்.
”மன நோயின் ஆணிவேர்கள் கட்டுப்பாடில்லாத உணர்வுகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும்
முயற்சிகளும் குற்ற உணர்வு மிகுந்தமையால் அதற்குக்
கழுவாய் தேடும் முயற்சிகளுமேயாகும்.”
சிக்மெண்ட் பிராய்டு - உளவியலறிஞர் உளப்பகுப்பாய்வு முறையை உலகுக்கு அளித்தார்.
இதுவரை மருத்துவ உலகில் இருந்த பல புரியாத புதிர்களுக்கு இவரின் ஆய்வுவழி விடை கிடைத்தது.
மருத்துவ உலகில் மாபெரும் புரட்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
”மனிதர்கள் தங்கள் மனத்தில் உண்டான தகாத எண்ணங்களை மனத்துள் அடக்க முயல்வதால்
நோய்வாய்ப்படுகிறார்கள்”- சிக்மெண்ட் பிராய்டு.
………………… தொடரும் …………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக