ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 157. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 157. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

அறிவியல் எழுச்சி:

மாமேதை ஹனிமான்: ஓமியோதி மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சாமுவேல் பிரடெரிக் ஹனிமான் – 1755 – 1843.

 செர்மன்நாட்டில்  உள்ள மேய்சன் என்ற ஊரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் . தன்னுடைய 24 ஆம் வயதில் அலோபதி மருத்துவத்தில் எம். டி. பட்டம் பெற்றார்.  துயரத்தில் வாடும் நோயாளிகளை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் அலோபதி மருத்துமுறை இவருக்குப் பிடிக்கவில்லை.  எனவே அந்த மருத்துவத் தொழிலை விட்டொழித்து மெழிபெயர்ப்புப் பணிக்குச் சென்றுவிட்டார். என்றாலும் அவருடைய மனம் மருத்துவ உலகைச் சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தது.  நோயாளியின் துயரத்தை   உடல் இயல்பின் இயக்கத்தைத் துன்புறுத்தாது நிரந்தரமாகக் குணப்படுத்தக்கூடிய வழியைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருந்தார்.

1790 ஆம் ஆண்டு ”  கல்லென்” என்பவர் எழுதிய ஆங்கில மருத்துவப் பேரகராதியை செர்மனிய மொழிக்கு மொழி மாற்றம் செய்து கொண்டிருந்தார். அந்நூலில்  “கொய்னா” சிறந்த மருந்து என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டார்.  முறைக்காய்ச்சலுக்கு கொய்னாதான் மருந்து என்பது அவருக்குத் தெரியும் எனினும்  கொய்னா மரங்கள் சூந்திருக்கும் இடத்தில் வசிப்போர்க்கு அடிக்கடி முறைக்காய்ச்சல் கண்டிருந்தது.  அவர் கொய்னா மரப்பட்டைச் சாற்றை உட்கொண்டு வந்தார். அவருக்கு முறைக்காய்ச்சல் நோய்க்குறிகள் தோன்றின. இச்சோதனையை பலரிடம் சோதனை செய்து பார்த்தார். நோய்க்குறிகள் ஒன்றாகவே இருந்தன.

  அதே மரப்பட்டையைப் பொடித்து ஒரு நுட்பமான முறையில் வீரியப்படுத்தி ஒரு சிறிதளவே உண்டபோது  முறைக்காய்ச்சல் முற்றிலும் குணமாகியது. இந்தச் சோதனை ஒரு புதிய மிகச் சிறந்த மருத்துவ முறை ஒன்று தோன்றுவதற்குக் காரணமாகியது.  

எந்த ஒரு பொருள் மிகுவினால் நோய் செய்கின்றதோ அதே பொருளை வீரியப்படுத்தி அதாவது அணுவாக்கிச் சிறிதளவே உண்ணும் போது அந்நோய் நீங்கிவிடுகிறது என்னும் மாபெரும் கண்டுபிடிப்பு 1796 ஆம் ஆண்டு மருத்துமேதை ஹனிமானால் வெளியிடப்பட்டது. இந்த மருதுவ முறைக்கு ஓமியோபதி என்று பெயர். (Homoeopathy – Treating disease by  very small doses of drugs )

ஓமியோபதி தத்துவம்.

 முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்றது இம்மருத்துவ நெறி.   எந்த ஒன்றினால் நோய் தோன்றியதோ அந்த ஒன்றினாலேயே அந்நோயை நீக்குவது. (Simila Similibus Curentur)

ஓமியோபதி என்றால்…Homoeopathy.

Homoeo = Same = ஒத்த.

(Pathos – Affection = உணர்வு/ துன்பம். ஒத்தது ஒத்ததைக் குணமாக்கும்.

ஒரே மருந்து மிகக் குறைந்த அளவு (Sigle Remedy ; Minimum Dose ) என்பது  ஓமியோபதி தத்துவம்.

 

 ஓமியோபதி மருந்துகள் நோயை விரைவாக எளிதாக, பூரணமாக குணப்படுத்திவிடுகின்றன. ஹனிமான்  தன்னுடைய மருத்துவ பேரேட்டில் (Organon of Medicine ) முதல் விதியாக எழுதியுள்ளது. “ ஒரு மருத்துவரின் கடமை நோயுற்ற மனிதனை பழைய நிலைமைக்கு நலமாக்குதலே “ (பக்க விளைவுகள் இன்றி  விரைவாக, நிரந்தரமாக) என்கிறார்.

இன்று ஓமியோபதி மருத்துவம் உலகெங்கும் மக்களை நல்வழியில் நலமாக்கிக்கொண்டுவருகிறது. அரிய பெரிய ஓமியோ மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய மாமேதை ஹனிமான் இறவாப் புகழுடையவர் 70 புத்தகங்கள் எழுதிக் குவித்தவர். ஓமியோபத்ய் மருத்துவத் தத்துவங்களை

1. Organon of medicine

2. Materia Medica Fura

3.  Chronic Disease

ஆகிய நூல்கள் வழி எடுத்துரைத்தவர்.

 

அறிவியல் வீழ்ச்சி:

 உலகம் போற்றும் மாபெரும் மருத்துவ மேதையை செர்மானிய அரசு ஹனிமானை நாடு கடத்தியது. “ – மருத்துவர் எச். செல்வராசு, மனித வரலாற்றில் மூன்று இலட்சம் ஆண்டுகள்.-1969.

 

“ A Doctor should know what is curable in the disease (or not curable). He should know what are the medicines which can cure the conditions and thirdly he should know  to employ the medicine   to effect a rapid and gentle cure.” –Dr. HAHNEMAN.

இந்த மாமேதை 1845 ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாள் பாரிசு நகரில் இயற்கை எய்தினார்.

 .............................தொடரும்..........................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக