சான்றோர் வாய் (மை) மொழி :
154. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல்
புரட்சி . எழுச்சியும்
வீழ்ச்சியும்.
கிப்போகிரடீசு:
கி. மு. 460
கிரேக்க நாட்டில் மைலீட்டசு தீவிற்குப்
பக்கத்துத் தீவாகிய – காஸ்’
தீவில் முதல்மருத்துவ நிபுணர் கிப்போகிரட்டீசு பிறந்தார்.
இவரே இன்றைய மேலை நாட்டு மருத்துவர்களுக்கெல்லாம் தந்தையாவார்.
நோய்கள் ஏற்படுவது பேயினால் அல்லது
நட்சத்திரத்தால் அல்லது சகுனத்தால் என மக்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தவர்.
பிணிக்கான காரணத்தைக் காண பிணியாளனை முறைப்படி சோதிக்க வேண்டும் என்று கூறிய முதல்வரும் இவரே.
ஆனக்சாகரசு:
அறிவியல் வீழ்ச்சி:
இவர் ஏதன்சு நகரில் வாழ்ந்தவர். சந்திரனை சிறியதொரு பூமி எனக் கண்டு
கூறியவர். சந்திரனில் பள்ளத்தாக்குகளும் மலைகளும் உள்ளன என்று
கூறினார். இவர் கூற்றுக்குமுன்
சந்திரனைத் தெய்வமென மக்கள் நம்பிப் பூசித்தும் வந்தனர்.
சந்திரனைக்கண்ட
ஆனக்சாசுரசு சூரியனையும் கண்டார் ; பிற கோள்களையும் கண்டார். விண்வெளியில்
காணப்படும் நட்சத்திரங்கள் எல்லாம் தனித்தனி உலகங்களே என்றும் கூறினார்.
இவ்வாறு ஆராய்ந்து தனது கருத்துகளை நூலாக வெளியிட்டுக்
கிரேக்க மக்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆனக்சாகரசு கருத்துக்களைக்
கொண்டாட வேண்டிய மக்கள் கொதித்து எழுந்தனர்.
ஏனெனில் காலங்காலமாக வழங்கிவந்த தெய்வக் கருத்துகளை எதிர்த்த மக்கள் ஆனக்சாகரசை நீதிமன்றத்திற்கு இழுத்தனர்.
நீதிமன்றம் ஆனக்சாகரசை நாடுகடத்த
ஆணையிட்டது.
ஹைப்பேசியா:
அறிவியல் வீழ்ச்சி.
ஜூலியஸ் சீசர் கி.மு. 102 காலத்தும் , அதற்குப் பின்பு
வந்த உரோமாபுரியினர் மருத்துவத்திற்கோ, விஞ்ஞானத்திற்கோ உரிய இடம் அளிக்கவில்லை. ஆராய்ச்சிக்கூடங்கள் கவனிப்பாரற்று மறையத் துவங்கின,.
விஞ்ஞானம் இருந்த
இடத்தில் ஆன்மஞானத்தைப்பற்றிப் பேசினர். இறந்தபின் தங்களுக்கு
இடம் தேடி, அதைப்பெற அலைந்தனர். வானநூலார்
யாரேனும் இருப்பின் அவர்கள் பரிகாசத்திற்கும் கேலிக்கும் ஆளக்கப்பட்டார்கள்.
ஆராய்ச்சியாளர்களை நாடு கட்த்தவும் கொலை செய்யவும் துணிந்தனர்.
ஹைப்பேசியா எனும் பெண் விஞ்ஞானியை மக்கள் கூட்டமொன்று
தாக்கி அவளுடைய சதையைப் பிய்த்து நாய்களுக்கு எறிந்தது.
அரசு ஆணைப்படி நூலகங்கள் மூடப்பட்டன.
அலெக்சாண்ட்ரியா பல்கலைக் கழகம்
மூடப்பட்டது. விஞ்ஞானிகளும் விவேகிளும் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள
உரோமைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக