வியாழன், 27 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 161 அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 161 அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

அறிவியல் வீழ்ச்சி :

பசுமைப் புரட்சி -  ‘சோழநாடு சோறுடைத்து’ என்னும் சிறப்புக்குரிய காவிரி நிலப்பகுதி இன்று திடலாக்கப்பட்டு வருகின்றது. ஆற்றுக்கரைகளிலும், சாலையோரங்களிலும் இருக்கும் வளமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், கலையரங்குகள், தொழிற்சாலைகள் ஆகியன கட்டப்படுகின்றன.

நீர்வளமும்,நிலவளமும் நிறைந்த தமிழ்நாட்டில் ஏரிகளும் குளங்களும் ஆறுகளும் வாய்க்கால்களும் தூர்க்கப்படுகின்றன. இதனால் வேளாண் உற்பத்தி அற்றுப்போகிறது.; சுற்றுச் சூழல் மாசுபடுகின்றது ; வேலை இழப்பும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகின்றன. விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதால் “பசுமைத் தமிழகம்” பகல் கனவாகிப் போனது.

பசுமைப்புரட்சியின் மூலம் அரிசி உற்பத்தியை 116% அதிகரித்த அற்புதம் 1966இல் துவங்கி 1997இல் முடிந்துவிட்டது.

 

விக்கிபீடியா:

”” இந்தியாவின் பசுமைப் புரட்சி (Green Revolution in India) என்று 1966ஆம் ஆண்டு முதல் இந்திய உணவுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விடுதலை பெற்ற இந்தியா உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீரிய ஒட்டு விதைகள்மேம்பட்ட உரவகைகள், மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகள் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டால் வேளாண்மை மேம்படுத்தப்பட்டு உணவுத் தன்னிறைவு பெற்றதே பசுமைப் புரட்சி ( Green Revolution) என்று அறியப்படுகிறது. அடிக்கடி பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் ஒருமுறை கூட பஞ்சம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1963ஆம் ஆண்டில் முனைவர் நார்மன் போர்லாக் இந்தியாவில் மரபுமாற்ற வீரிய கோதுமை விதைகளை அறிமுகப்படுத்தினார். இவரே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[1]

முடிவுகள்

பல்வேறு வீரிய விதைகளில் கோதுமை சிறந்த ஈட்டைத் தந்தது. மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகளை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில் அனைத்திந்திய வானொலியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்திய வேளாண் அறிவியலாளரும் இந்திய பசுமை புரட்சியின் தந்தையுமான எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் இந்திய நடுவண் அமைச்சில் வேளாண் அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் ஆகியோரின் கூட்டு முயற்சியும் பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

எதிர் கருத்துகள்

வேதிய பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதால் மண்ணின் தரம் குறைந்ததாக விமரிசனங்கள் எழுந்துள்ளன. இது எதிர்கால வேளாண்மையை பாதிக்கும் என்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் பரவக் காரணமாக அமைந்ததாகவும் இயற்கை அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அண்மைக்காலங்களில் கரிமக் களைக்கொல்லிகளும் இயற்கை உரங்களும் பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

 

அறிவியல் எழுச்சி :

கோ. நம்மாழ்வார் (G. Nammalvar6 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம்திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1] இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.

………………………………..தொடரும் …………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக