சான்றோர் வாய் (மை) மொழி :
143. அறிவியல்
சிந்தனைகள் - மார்க்சீயம் – மதம் – கடவுள்.
” மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துகிற
இயற்கை, சமுக சக்திகளைப் பற்ற முனையும் உணர்ச்சிப் படிவம்தான் மதம் என்பது.” – எங்கல்சு.
“ இனக்குழுக்களிலிருந்து நாடுகளும் அரசுகளும் தோன்றின, அரசியலும்
தோன்றியது. இவற்றோடு மனத்தில் மனிதரைப்பற்ரிய விகாரமான பிரதிபலிப்பு (FANTASTIC REFLECTION) தோன்றியது.
இதுதான் ’சமயம்’ என்பது. மாறிய சமுதாய அமைப்பில் மனித மனத்தின் இப்படைப்புகள் மனித சமுதாயத்தை ஆட்டிப்படைப்பதாகத்
தோன்றின. உழைப்பைவிட, உழைப்பைத் திட்டமிடும் மனம் உயர்ந்ததாயிற்று –” –எங்கெல்சு.
“ அறிவியல் வளர வளர மதம் சிதைவுறுகின்றது. தன் சூழலின் மீதும் தன் மீதும்
தன் அதிகாரத்தை நிறுவ அறிவு உதவும் பொழுது அவன் விசுவாசத்தின் தேவையிலிருந்து விடுபடுகிறான்.”
– ஜார்ஜ் தாம்சன்.
“ இந்த விசுவாச
விடுவிப்பு என்பது சுலபமாக நடந்துவிடுவதில்லை. ஏனெனில் இந்த விசுவாசங்கள் பற்றிய நடைமுறைகள்
பண்பாட்டின் அங்கங்களாகிவிடுகின்றன.” பேராசிரியர்
கா. சிவத்தம்பி..
கடவுளை வானத்திலிருந்து தூக்கி எறிவதற்கு, மதக் கடவுள்களை ஒழிப்பதற்கு
மார்க்சு தயாரிப்புச் செய்து கொண்டிருந்தபொழுது
மிக முந்திய காலமான 1838 இல் பண்டைக் காலத்தின் மாபெரும்
நாத்திகர்களான – எபிகூரசு, லுக்ரேத்தியசு காருசு ஆகியோரை நோக்கித் திரும்பினார் ‘மத்தின்
இறுக்கமான முடிச்சுகளிலிருந்து மனிதர்களின் அறிவை விடுவிப்பதற்கும் ….அதன் மூலம் கடவுளின்
அடிமையை” வானத்திற்கு உயர்த்துவதற்கும் அவர்கள் முயன்றது அவரைக் கவர்ந்தது.
மார்க்சு டாக்டர் பட்டம் பெறுவதற்குச் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையில் – எபிகூரசு “ கிரேக்க அறிவியக்கத்தின்
மாபெரும் பிரதிநிதி” என்று லுக்ரேத்தியசு எழுதிய
வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார்.
எபிகூரசு சலுகைகளைச் செய்யவில்லை, சாமர்த்தியமாகவோ அல்லது தந்திரமாகவோ,
நடந்துகொள்ளவில்லை. உலகத்தைப் பொறுத்தமட்டில் அவர் பகிரங்கமான நாத்திகராக இருந்தார்.
அவர் மதத்தை நேரடியாகத் தாக்கினார்.”- மார்க்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக