புதன், 7 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 1

கலித்தொகை – அரிய செய்தி
உரையாசிரியர் – முனைவர் அ. விசுவநாதன்

பாலைக் கலி  – பாலை பாடிய பெருங்கடுங்கோ
கலித்தொகை – அரிய செய்தி – 1
காதல் உண்மை
துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 6 :10 – 11
 நெடுந்தகாய் ! கடுமையான வழிகளைக் கடந்து பொருள் தேடச்செல்கிறாய் ; நும்முடைய துன்பத்திற்குத் துணையாக எம்மையும் இட்டுச் செல்வதை விட வேறோர் இன்பமும் எமக்கு உண்டோ ? – தலைவி.
நிமித்தம்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே
 பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 11 : 21 – 22

தோழி ! நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர் – நமது புனைந்த நலத்தைக் கெடுப்பவர் அல்லர் -  காரணம் என்னெனில் நம்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்தி கூறின – நல்ல அழகை உடைய மையுண் இடது கண்ணும் துடித்தது காண்.
 தொல்காப்பியர் காலம் தொட்டே நிமித்தம் பார்த்தல் நிகழ்ந்து வருகிறது. பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன என்றால் அது நல்ல இடத்தில் ஒலிக்க வேண்டும். ( மேலும் காண்க : அகநா . 9. 151.)
கண்ணும் துடித்தது
 பெண்களுக்கு இடக் கண்ணும் ஆண்களுக்கு வலக் கண்ணும் துடித்தல் நன்னிமித்தம் ஆகும் ; மாறித் துடித்தால் தீ நிமித்தம் ஆகும்.(கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்…………………. எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன………...
( சிலம்பு -5)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக