வெள்ளி, 9 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 4 - 5

கலித்தொகை – அரிய செய்தி – 4 - 5
நல்லாரைச் சேர்ந்தொழுகு
 கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராங்கு
 மாற்றுமை கொண்ட வழி.
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 12 :  18 – 19
 நமக்கு வருகின்ற கூற்றத்தையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழிச் செல்லாமல் – அவ்வழியினின்று விலகி நன்மக்கள் வழியினை நினக்கு வழியாகப் பேணவும்.

கலித்தொகை – அரிய செய்தி – 5
கள்ளச் சந்தை வணிகம்
 செம்மையிம் இகந்துஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
 இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயே
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 14 :  14 – 15
நேர்மையான வழியிலிருந்து மாறுபட்டுப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் வாழும்போதும் இறந்தபின்னும் அவர்க்குப் பகையாக விளங்கும் என்ற உண்மையை அறியாயோ நீ !. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக