வியாழன், 2 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -40

மெய்ப்பொருள் காண்பது அறிவு -40
கர்ணபரம்பரைக் கதை
“எக்காரணத்தாலோ கம்பருக்கும் சோழ மன்னனுக்கும் மன வேற்றுமை உண்டாயிற்று. அந்நிலையில் மன்னனை நோக்கி

‘மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் – என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு.’

என்று கடுமையாகப் பேசிவிட்டுக் கம்பர் சோழ நாட்டை விட்டகன்று ஆந்திர தேசத்திலுள்ள ஓரங்கல் நாட்டை அடைந்தார். அப்போது பிரதாபருத்திரன் என்பவன் அங்கு அரசு வீற்றிருந்தான்.அவ்வேந்தனைத் தமிழ்ப் புலமையால் வசப்படுத்தினார் கம்பர்.

உண்மை உரை

          தமிழ்க்கவிஞனின் தன்மானத்தை உரசிப்பார்க்காதே. சேலம்’ மாடர்ன் தியேட்டர்’முதலாளி, கையில் சாட்டையை வைத்துக்கொண்டு நடிகர்களிடம் வேலை வாங்குவார்- அவர் படத்திற்குப் பாட்டெழுத பட்டுக்கோட்டையாரை அழைத்துச் சென்றார் எம்.எஸ். விசுவநாதான். முதலாளி, நாற்காலியில் அமர்ந்திருந்தார், அறையில் வேறு நாற்காலிகள் எதுவும் இல்லை. பட்டுக்கோட்டையும் இசையமைப்பாளரும் நின்று கொண்டே பாட்டு எழுதவேண்டிய கதைக்களம் குறித்துப் பேசிக்கொண்டிருக்க…. 

பட்டுக்கோட்டையார் முதலாளியிடமே ஒரு துண்டுத்தாள் வாங்கி ஏதோ எழுதிக்கொடுத்தார்;முதலாளி வேலையாளை அழைத்து இரண்டு நாற்காலிகள் போடச்சொன்னார். எதிரே நின்ற இருவரையும் நாற்காலியில் அமரச் சொன்னார்.. உட்காந்தவுடன் உடனே “ சரி  நீங்கள் பாட்டோடு வாருங்கள்’ என்று அனுப்பிவைத்தார். அழைத்துச் சென்ற இசையமைப்பாளருக்கு அதிர்ச்சி....!

..”யோவ்..அந்தப் பேப்பர்ல அப்படி என்னய்யா எழுதுன…? ‘ 

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ ன்னு …! எழுதிக்கொடுத்தேன்.” என்றார் ”பாட்டுக்கோட்டை”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக