வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -41

மெய்ப்பொருள் காண்பது அறிவு -41

” திருக்குறளுக்குப் பாயிரமாக அமைந்தவை கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் ஆகிய நான்குமாம்.

கடவுள் வாழ்த்து : எந்த ஒரு தனிச் சமயத்திற்கு மட்டும் சொந்தமானவை அல்ல. தான் எடுத்துக்கொண்ட நூலுக்கு இணங்க எல்லாச் சமயங்களின் பிழிவை, சாற்றை, பொதுவான உண்மைகளை மட்டும் கடவுள் வாழ்த்தில் அமைத்துக் கூறியுள்ளார். கடவுள் திருவடிகளை மட்டுமே வள்ளுவர் காட்டுகின்றார்.
உலகத்தோற்றம், உயிர்த்தோற்றமும் மழையின்றி (நீர்) இல்லை. வான் சிறப்பு அதிகாரமே பொருட்பாலில் அமைந்துள்ள எட்டு இயல்களுக்கும் எழுபது அதிகாரங்களுக்கும் தோற்றுவாயாக உள்ளன.
வள்ளுவரின் காமத்துப்பாலிற்குத் தோற்றமும் ஊற்றும் 

 இவ்வதிகாரமே திரு.வி.க. “நீத்தார் பெருமை காமத்துப்பாலின் தெளிவு என்பது எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மை,” என்கிறார்.
 கடவுளின் அருங்குணங்களைப் பெற்ற நீத்தாரே உலகுக்கு அறனை, அருளை எடுத்துக்காட்டி அவற்றின்படி நடக்க மக்களை வற்புறுத்தமுடியும். நீடு வாழ அறம் அவசியம், பொருளிலும் இன்பத்திலும் அறமே ஊடுருவி நிற்றல் வேண்டும் எனவே நீத்தார் பெருமைக்குப்பின் அறன்வலியுறுத்தல் அமைக்கப்பட்டுள்ளது.

 திருக்குறள், உலக அமைதியை நாடியே உலகத்திற்கு ஒரு பொதுமறையைச் செய்தார்.”—சான்றோர் கூற்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக