புதன், 15 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -52


மெய்ப்பொருள் காண்பது அறிவு -52
வள்ளுவர் கூறும் மெய்ப்பொருள்
 “வள்ளுவர் கூறும் மெய்ப்பொருள் உலகை ஆழ்ந்து உற்றதன் விளைவால் வந்த மெய்ப்பொருள். மன்பதை நல்வாழ்வு வாழ்ந்து விடுதலையடையத் தந்த மெய்ப்பொருள்.
                             சங்ககாலச் சமுதாய வாழ்வின் நலந்தீங்குகளை, இன்ப துன்பங்களை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, சிக்கல் சீரழிவுகளை, வறுமையின் கோரத் தாண்டவங்களை, கொலைத்தொழில்களை, வரம்புமீறிய காம விளைவுகளை, அலசி ஆராய்ந்து அனுபவ மருந்தாகத் தந்த பொருள். வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம், நாளும் நாம் சாகின்றேமால், காயமே இது பொய்யடா, செத்தாரைச் சாவார் சுமந்து செல்கின்றனர். வேற்கண்ணன் அன்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோற்கண்ணளாகும் குனிந்து, உண்டுண்டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண் டொண்ணென்னும் பறை என்றெல்லாம் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமைகளை யெல்லாம் சொல்லி மனிதனைப் பயங்கொள்ள வைத்தது, வாழ்வில் அவநம்பிக்கை கொள்ள வைத்தது அவருடைய சித்தாந்தமன்று.
                    அவருடைய சித்தாந்தம் மனித ஆற்றலில் நம்பிக்கை கொண்ட சித்தாந்தம்.மனிதன் ‘மண்ணில் நல்லவண்ணம் வைகலும் வாழலாம் என்ற உணர்வு ஊட்டிய சித்தாந்தம். தன் சித்தாந்தத்தை அவர் சொல்லும் பாணியே அலாதியானது.” – சிவ. திருநாவுக்கரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக