செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -58

மெய்ப்பொருள் காண்பது அறிவு -58
 பாண்டியன் மீன் கொடி
”நீரின் மிகத் தொன்மையான உயிரினம்; பெருங் கூட்டமாக வாழும். இயங்கிக் கொண்டே இருக்கும். பிறை வடிவில் அமைந்துள்ள வால் கொண்ட சூறை மீன் ( Sail Fish ) மணிக்கு 80 கி.மீ. வேகத்தில்  நீந்திச் செல்லும் ஆற்றல் உடையது.  காற்றைவிட 800 மடங்கு அடர்த்தி உடையது நீர்; நீரில் உயிர் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. ஆழ்கடலில் எதுவும் உறங்குவதில்லை.” –டிஃச்கவரி-தமிழ்.

“ மீனைப்போல் தங்கள் குலம் பெருக வேண்டும் என்பதற்காக மீனைக் குலக்குறியாகக் கொண்டார்கள். பொதுவாக ஒரு விலங்கு ஏதாவது ஓர் ஆற்றலைக் கொண்டிருந்தால் அந்த ஆற்றல் தங்களுக்கு வேண்டும் என்ற ஆசையால் அதனைக் குலக்குறியாகக் கொண்டார்கள். ஆற்றல் விருப்பம்,  குலக் குறி நம்பிக்கையின் ஓர் அம்சம். மற்றோர் தன்மை குலத்தினுள் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது.
உலகம் முழுவதிலும் இக் குலக்குறி நம்பிக்கை இனக்குழு மக்களிடையே உள்ளது. இந்த நம்பிக்கை வேட்டை வாழ்க்கையிலிருந்தும் பண்டைய பயிர்த்தொழிலிலிருந்தும் தோன்றியது . ”–நா. வானமாமலை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக