தமிழமுது –140.
– பண்டைய
தமிழ்நாட்டின் எல்லைகள்.
தமிழ்
வழங்கும் நாடு தாழாது:
”தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு.” பரிபாடல்
திரட்டு -8
மீன் கொடி பறக்கும் தேரினை உடைய பாண்டிய மன்னனின் பொதிய மலை
இருக்கும் காலம்வரை, அவன் தலை நகரமாகிய மதுரை நகரம் கேடின்றி நின்று நிலைத்துக் குளிர்ந்த
தமிழ் மொழியையே எல்லையாக உடைய தமிழ் நாடெங்கும் புகழ் பரப்பிப் பொலிவிவதன்றித் தனது
சிறப்பின்கண் சிறிதும் குறைதல் உண்டாகுமோ..? உண்டாக மாட்டாது…!.
( தமிழ் மொழி வழங்கும் பரப்பினையே எல்லையாக உடையது
தமிழ் நாடு என்க. எனவே, இப்புலவர் பெருமான் ஒரு நாட்டிற்கு எல்லை, அம்மொழி வழங்கும்
பரப்பேயாகும் என நுண்ணிதின் ஓதியது உணர்க.)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும்
…………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக