புதன், 22 அக்டோபர், 2025

தமிழமுது –150 – தொல்தமிழர் இசை மரபு:..............பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.

 

தமிழமுது –150 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 10.

பேராசிரியர், முனைவர்  தமிழண்ணல்.

பாட்டு வடிவமும் உள்பொருள் உணர்வும் :

சங்க காலத்தில், கலி, பரி, வரி என ஆடலுடன் கூடிய குழுப்பாடல்கள் சிறப்புற்றிருந்தன. குரவைக் கூத்து, துணங்கை ஆடல், வள்ளைப்பாட்டு எனப் பலவகை இருந்தன, அவ்வக்கூத்துக்கேற்ற பாட்டுப்பொருள், ஆடலுக்கேற்ற இசைச்சந்தம், தாளம் எல்லாம் இயல்பாய் அமைந்தன. இதனால் சங்கப்பாடல்களிலும் பாட்டுள்வரும் உணர்வுக்கேற்ப ஒரே பாடல் பல வடிவ அமைப்பைப் பெற்றிருக்கக் காணலாம்.

 

 ‘சங்க இலக்கியம்’என்ற பெயரால் குறிக்கப்படுவன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே யாம். இவற்றுள் மறைந்தனபோக, இன்று கிடைப்பவற்றில், நேரிசை ஆசிரியமே மிகுதி. ஆனால் அது பாட்டுணர்வுக்கு ஏறப மாறிமாறி அமைவதைப் பாடிப்பார்த்து மகிழலாம்.

 

 “நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ? –(குறுந்தொகை)

இது ஒரு நடை, ஆவலுடன் வினவும் மனவுணர்வு இது.

“அகவன்மகளே ! அகவன்மகளே!

மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டே”- (குறுந்தொகை)

இவ்வாறு அழைப்பது போன்ற நடை.

 

 “ உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி

நினைத்தனென் அல்லெனோ பெரிதே நினைத்து

மருண்டனென் அல்லெனோ உலகத்துப் பண்பே.”- (குறுந்தொகை)

 

இதில் அந்தாதி போலும் நடையினிமை காணலாம்.

இவ்வாறு நூறுவகைப்படுத்தலாம். ஒரே ஆசிரியம் இவ்வாறு பலவகை நடையுடன் அமைகிறது.. கலிப்பா, பரிபாடலில் இவ்வகைமை மிகுதி.

 

 பேச்சு நடை:……தொடரும்………………

………………………..தொடரும்………………

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக