செவ்வாய், 21 அக்டோபர், 2025

தமிழமுது –149 – தொல்தமிழர் இசை மரபு:.........பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.

 

தமிழமுது –149 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 9.

பேராசிரியர், முனைவர்  தமிழண்ணல்.

 

 மரபு:

சங்க இலக்கியம் ‘மரபு’ வழி இலக்கியம். ஒரு சில கூற்றுக்களே, ஒருசில துறைகளே திரும்பத் திரும்பப் பாடப்படுகின்றன. எனவே இவை ‘வார்ப்புக் கவிதைகள்’ என்று குறை கூறுவர். மரபு பற்றியும் மரபை அறிதல் மாற்றுதல் புரட்சி செய்தல் பற்றியும் மேல்நாட்டவர் மிக விரிவாக ஆராய்ந்துள்ளனர்.மரபை மிகவும் ஆழமாக அறிந்து கடைப்பிடிப்பவர்களே, தங்களின் தனித்தன்மையையும் காட்டக்கூடும்.

 

சுருங்கச்சொன்னால். ‘மரபு’ ஒரு விளையாடு களம் போன்றது. ஒரு பூப்பந்தாட்டம் என்றால் எல்லைக்கோடுகள்,  தடுக்கும் வலை, ஆட்டவிதிகள் எனப்பலவுண்டு. அவை அனைத்துக்கும் கட்டுப்பட்டே, ஆட்ட்த்தில் தன் தனித்திறனைக் காட்ட வேண்டும்.. இது ஒரே மாதிரி ஆட்டந்தானே என்று யாரும் சோர்வடைவதில்லை.

 

“நோம்என் நெஞ்சே நோம் என் நெஞ்சே

இமைதீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி

அமைதற்கு அமைந்த நம் காதலர்

அமைவில ராகுதல் நோம் என் நெஞ்சே.” (–காமஞ்சேர் குளத்தார் ; குறுந்தொகை.)

 

” நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே

 புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்

கட்குஇன் புதுமலர் முட்பயந் தாஅங்கு

இனிய செய்தநங் காதலர்

இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே” (–அள்ளூர் நன்முல்லை ; குறுந்தொகை.)

 

 இரண்டையும் ஒப்பிடுங்கள். ஒன்று போன்ற கருத்து, பிரிவிடைத் தலைவி தன் நெஞ்சிற்கு கூறி வருந்துதல் ; முன்னது அளவளாவி வாழ் வேண்டியவன் அவ்வாறு நடந்திலன் என்பது, பின்னது, கண்ணுக்கினியதாய்க் காட்சி தந்து பிறகு முள்ளாகிக் குத்தும் நெருஞ்சி போல முன்பு இனியவனாக இருந்து பிறகு மாறினான் என்பது. இதில் பொதுமரபும் தனித் தன்மையும் கலந்திருப்பதைக் காண்கிறோம். இங்ஙனம் ஒவ்வொரு பாடலிலும் பொது மரபினூடே பாடியவரது தனித்திறன் இழையோடும் ; அதைக் கண்டறிவதே இலக்கிய இன்பம் தரும்.

பாட்டு வடிவமும் உள்பொருள் உணர்வும் : ……..தொடரும்….

 

………………………..தொடரும்………………

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக