புதன், 8 அக்டோபர், 2025

தமிழமுது –143 – தொல்தமிழர் இசை மரபு:............தமிழிசை ஆய்வறிஞர் வீ.ப.கா. சுந்தரம். (1915 – 2003.)

 

தமிழமுது –143 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 3.

தமிழிசை ஆய்வறிஞர் வீ.ப.கா. சுந்தரம். (1915 – 2003.)

 

”உலக மொழிகளில் செவ்விசையில் சிறந்து விளங்குவது கிரேக்கமும் தமிழிசையுமே. இசையில் கணக்கியலை ஆய்வு செய்த கிரேக்க கணித மேதை பித்தகோரசு கூட்த் தமிழிசையின் காலக் கணக்கியலை வெகுவாகப் புகழ்ந்துளார். பித்தகோரசின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.”

தமிழும் இசையும்:

 பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல் ; தொல்காப்பியத்தில் இசைக் குறிப்புகள் ; பழந்தமிழ் இலக்கியத்தில் தாள முழக்கியல் ; அறிவனார் இயற்றிய பஞ்சமரபு நூலுக்கு ஒப்பீட்டு விருத்தியுரை ; தமிழிசை வளம் மத்தள முழக்கியல் நூல்களைப் படைத்துள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்காக 12 ஆண்டுகள் உழைத்து, ’தமிழிசைக் கலைக் களஞ்சியம்’ என்னும் பெரு நூலை உருவாக்கியுள்ளார். அமெரிக்காவின் மிகச் சிறந்த ஆர்வார்டு  இசையகராதிக்கு இணையாக இக்கலைக் களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.. நான்கு தொகுதிகள், ஏறக்குறைய மூவாயிரம் கலைச் சொற்கள், 2340 கட்டுரைகள், இதில் இடம் பெற்றுள்ளன.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 

 ……………………………………தொடரும் …………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக