வியாழன், 9 அக்டோபர், 2025

தமிழமுது –144 – தொல்தமிழர் இசை மரபு:........பேராசிரியர், முனைவர் இ.சுந்தரமூர்த்தி .

 

தமிழமுது –144 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 4.

பேராசிரியர், முனைவர் இ.சுந்தரமூர்த்தி .

”தமிழை முத்தமிழ் என்று கூறுவது மரபு ; தமிழை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவாகப் பிரித்துப் போற்றினர். இயற்றமிழே இசைத் தமிழாகவும் நாடகத்தமிழாகவும் வளர்ச்சி பெறுகிறது.

 

பண்ணுடனும் தாளத்துடனும் இணைந்தும் இழைந்தும் வருவது இசைத் தமிழ். நடிப்பிற்கும் மெய்ப்பாட்டிற்கும் ஏற்ப வழங்கும் தமிழ் நாடகத் தமிழ். இயற்றமிழ் என்பது இயல்பாக வழங்குவது. இசை கேட்டு இன்புறுவது ; நாடகம் பார்த்து இன்புறுவது ; இயல் படித்து இன்புறுவது. இயற்றமிழ் கல்வி வல்லார்க்கே பெரிதும் பயன்படுவது. இசையும் நாடகமும் பெரு வளர்ச்சி பெறுவதற்கு இயல் அடிப்படையானதால் முத்தமிழ்ப் பிரிவினுள் இயல் முதன்மையாக இடம் பெற்றது.

 இயற்றமிழ் உரைநடையும் செய்யுளுமாகிய  இரு நிலையிலும்  வளர்ந்துவருகின்றது. செய்யுள் வடிவம் முன்னர்த் தோன்றியது ; பாட்டு வடிவம் பின்னர்த் தோன்றியது.

 

 செய்யுள் வடிவமே தொடக்கக் காலத்தில் பெருஞ் செல்வாக்குடன் திகழ்ந்தது. அனைத்துத் துறை நூல்களும் செய்யுள் வடிவிலேயே எழுந்தன.  இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம் கலை எனப் பல துறைகளிலும் செய்யுள் வடிவத்திலேயே நூல்கள் தோன்றின. இதனாலேயே பலவகைப் பாக்களும் தோன்றின. ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி எனப் பா வகைகளும் தொன்றுதொட்டு வளர்ச்சி பெற்றன.

பரிபாடலும்  வேறு சில நூல்களும் இசைத்தன்மை பெற்று விளங்கின.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 

……… 17 / 10/ 25 இல் மீண்டும்………………தொடரும் …………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக