தமிழமுது
–146 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 6.
பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.
இயற்கைப் பாடல்களும் செம்மொழிச் செவ்வியற் பாடல்களும்.
மேலும் கூத்து, நாடகம் பற்றிய குறிப்புகள் பலவுள. ஆடுகளமகன் ஆடுகளமகள்
என்பதால் களம் அமைத்துக் கூத்தாடியமை உணரப்படுகிறது.
கபிலர் ஒரு கூத்தாடு களத்தையே கண்முன் கொண்டுவருகிறார்.
அகநானூற்றில் வரும் அது ஒரு கற்பனையே என்றாலும் அன்று பல்லியம் முழங்க மேடை ஏறி ஆடும்
விறலியைப் படம் பிடிக்கின்றது.
“ ஆடுஅமை
குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசை
தோடமை முழவின் துதைகுரலாக
கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக
இன்பல் இமிழிசை கேட்டு கலி சிறந்து
மந்தி நல் அவை மருள்வன நோக்க
கழைவளர் அடுக்கத்து இயலி ஆடுமயில்
நனவுப் புகுவிறலியில் தோன்றும் நாடன்”
இப்பாடல்வழி அன்று கூத்தாடு களம் பற்றித் தெளிவுபட
அறிகிறோம்.
”விழவில் கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும் இவ் உலகத்து” –புறநானூறு.
என்பது கூத்திலாடும் நடிகர்களைச் சுட்டிக் கூறுகிறது.
“புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட்டையேட.” –புறநானூறு.
ஒரு தாமரைக்குளம்
அதில் ஒரு கரும்புத் தண்டினைப் பிய்த்து எறிந்தால் தாமரைப் பூ சிதறி அக்குளம் முழுவதும்
இதழ்கள் மிதக்கும். அதைப்போலத் திரைச்சீலையையுடைய ஆடுகளம் பொலிவுற்று விளங்கியதாம்.
இங்கு ஆடுகளம் போலவே அகப்பாடல்களுக்கும் ‘களம்’ உளது. தொல்காப்பியர்
‘களன்’ என்பார்.
‘ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும்
கரும நிகழ்ச்சி இடம் என மொழிப.”
இதை விளக்கும் போது
‘இடம்’ என்று கூறி, ஒரு பாடலில் வரும் நிகழ்வைக் களன் என்று கூறுகிறார்.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No:
0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
………………………. தொடரும்…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக