தமிழமுது
–147 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 7.
பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.
ஒரு பாடல் ஓர் அடிக்கருத்தையே கொண்டு விரிவதை
இது சுட்டுகிறது. பேராசிரியர் போன்ற உரையாசிரியர் தரும் விளக்கம் மிக நுட்பமானது.
அஃதாவது காட்சியும் ஐயமும் துணிவும் புணர்ச்சியும்
நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் என்று இன்னோரன்ன
எல்லாம் ஒரு நெறிப்பட்டு ஓர் இயல்புடன் பிரிது நோக்காது
முடிய வேண்டும் எல்லாம் ஒரு நெறிப்பட்டு இயற்கைப் புணர்ச்சி
என்னும் ஓரிலக்கணத்தான் முடியும் என்பது.
அரிஸ்டாட்டிலின்
முவ்வொருமைக் கோட்பாட்டுக்கு அவர்கள் கூறும்
விளக்கங்களைவிட இவ்விளக்கம் மிகவும் பொருந்தி வருகிறது.
பாணர் விறலியிடமிருந்து வந்தால் அவர்கள் ஆடிய களம், அகப்பாடல்
உரியாயிற்று ஆடியவர்கள் கூற்று நிகழ்த்துவோர் ஆயினர் ; ஆடல் பாடலானது , ஒரு பாடல் காண்போம்.
அவர்கள் காதலித்தனர்; பழகினர் ; உயிருக்குயிராய்
ஒன்றினர். ஆனால் திருமணம் ஆகாது காலம் நீட்டித்தது. அவளது இயல்பான காம உள்ளுணர்வு துடித்தது.
இரவு நேரம் –நள்ளிரவு. ஊரே உறங்குகிறது. பக்கத்தில் படுத்திருக்கும் தோழியும் கவலையின்றி
ஆழ்ந்து உறங்குகிறாள். தலைவிக்கு உறக்கம் வரவில்லை. காமத்தை “ உறுதோறு உயிர்தளிர்ப்பத்
தீண்டலால்” என்பார் திருவள்ளுவர். இங்கு பசி எடுத்தவன் எவ்வாறு துடிதுடிப்பானோ, அவ்வாறு
நெஞ்சமும் உடலும் துடிக்கின்றன. சுற்றிலும் இருள்; சுடுகாட்டு அமைதி ; அவன் எங்குள்ளானோ..?
பொருள் தேடப்போனானோ..? ஒரு வேளை மறந்து அலட்சியமாய் எங்கேனும் இருக்கின்றானோ..?
பிறிதொரு பாடலில்………தொடரும்………………………
Pl.
Donate:
R.KUMARAN,Thanjavur;
Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD
………………………. தொடரும்…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக