தமிழமுது
–148 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 8.
பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.
பிறிதொரு அகப்பாடலில் (குறுந்தொகை) இவ்வாறு பிரிவால்
வருந்தும் ஒருத்தன, தான் உலகத்தொடு போரிடுவதாகக் கூறி வெதும்புகிறான். இங்கு இவளுக்கு
அந்த இரவில் குளிர்ந்த அசைந்து சுழன்று வரும் காற்று மேனியில் படுகிறது. அதனால், காமநோய்
முற்றுகிறது அது மனநோய்போல் பொங்கி எழுகிறது.
“முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ! ஒல்! எனக் கூவேன் கொல்?
அலமரல் அசைவழி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.”
ஒரு கூத்து நடக்கும் காட்சிபோல் இல்லையா? ஓர்
அவலக் காட்சிப் படப்பிடிப்பில் மெய்ப்பாட்டு நடிப்பில் இப்பாட்டு விஞ்சுகிறது. பாடலே
ஆடுகளமாகிறது.
பாணன் பாடினியர் பாடிய
விதத்திலிருந்து உருவானதால், அவர்கள் நடத்திய
– நடித்த சிறுசிறு ஆடற்காட்சிகள்போல் அகப்பாடல்கள் உருவாகியுள்ளன.
இக்காட்சிக் களப் படப்பிடிப்பில் ஒரு மனநிலை பதிவாகியுள்ளது
’பசித்துத் துடித்து விதும்பும் புலம்பல் ; வயிற்றுப்பசிபோன்றதுதான்
உடற்பசியும்.
மரபு………………………..தொடரும்………………
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No:
0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD
………………………. தொடரும்…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக