திங்கள், 17 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 172-அறிவியல் சிந்தனைகள்: பிளேட்டோ .Plato : கி.மு. 428 – 347.

 

சான்றோர் வாய் (மைமொழி : 172-அறிவியல்

சிந்தனைகள்: பிளேட்டோ .Plato : கி.மு. 428 – 347.

சாக்ரடீசின் மாணவர்சாக்ரடீசின் கருத்துகளை நூலாக்கியவர் பிளேட்டவின் அரசியல் தத்துவம் உயர்ந்தது. இவர் உரையாடலில் கற்பனைகவித்துவம் ஆன்மிகம் இழையோடும்.

 

காட்டுமிராண்டியாகவின்றி  - நாகரிகமுள்ள கிரேக்கர்களாகவும்அடிமையாகவின்றிஉரிமையார்களாகவும்பெண்களாகவின்றிஆண்களாகப் பிறந்ததற்கும் -  அனைத்திற்கும் மேலாகச் சாக்ரடீசின் காலத்தில் வாழும் பெருமை பெற்றதற்காவும்நான் கடவுளுக்குக் கட்டுப்பாடுடையேன்என்றார், பிளேட்டோ.

 

பிளேட்டோ எழுதிய நூல்கள் :

உரையாடல்கள் , குடியரசு, ஸ்டேட்ஸ்மேன், சட்டம்.

பிளேட்டோ, செல்வக் குடியில் பிறந்தவர். தன் ஆசான்  நஞ்சுண்டு இறந்தபின் அங்கு வாழ விரும்பாது, அறிவிலிகள் நடத்திய கும்பல் ஆட்சியை வெறுத்து வெளியேறினார். உலக நாடுகளைச் சுற்றியபின்பு ஏதென்சு திரும்பினார். அறிஞர்களை உருவாக்க அகாடமி (……….) நிறுவினார்.

 கருத்துமுத.ல் வாதம் :

பிளேட்டோவின் தத்துவ அமைப்புகருத்துமுதல் வாதம்’ . கருத்தே உறுதிப்பொருள். இக்கருத்துகள் யாவும் வெறும் வடிவங்கள்தாம். அவை ஆக்கப்பட்டவையல்ல என்பதால் அழியக்கூடியவையுமல்ல. இக்கருத்துகளை அறிவால் அறிய முடியுமே தவிரப் புலன்களால் காணமுடியாது.”

மாறும் பொருள்களும் மாறா வடிவங்களும் சேர்ந்ததே நம் காட்சிக்குட்படும் இவ்வுலகமும் பேரண்டமும்.” என்றார்.

 

பிளேட்டோவின் அரசியல், சமுதாயக் கோட்பாடு  உயர் நற்பண்பே பேரறிவு ; நற்பேரறிவே உயர் நற்பண்பு.” என்பதாகும்.

 குடியரசு:

 பகுத்தறிவு இயல்பாகவே மேம்பட்டிருப்பவர்கள் ஆளும் தகுதி உடையவர்கள் ஆண் நாயைப் போன்று பெண் நாயும்  வீட்டைக் காக்க வல்லது. “ அறிவுடைய பெண்களும் ஆள்வோர் வரிசையில் இடம் பெறலாம்.”

முடியாட்சி, குடியாட்சி,  குழுவாட்சி போன்ற அரசியல் அமைப்புகளில் ஏற்புடையது  எது..? சிறப்புடையது எது..? ஆளுகின்றவர்கள் நற்பேரறிவும் உயர் பண்பும் உடையாராயின் எல்லா அரசியல் அமைப்புகளும் ஏற்புடையனவே.

 அரசியல் அங்கங்கள் அனைத்திற்கும் உயிர் நாடியாக இருப்பவர்கள் ஆள்வோரே. குடியாட்சித் தத்துவமும் முடியாட்சித் தத்துவமும்  கலந்ததொரு அரசியல் அமைப்பு நடைமுறைக்குச்  சிறந்த அமைப்பு எனக் கருதுகிறார் பிளேட்டோ. இவ்வமைப்பில் உரிமைக்கும் அறிவுக்கும் ஒருசேர இடமுண்டு.

 

கல்வி:

 உயிரினும் மேலாக ஒழுக்கத்தை மதிக்கச் செய்வதுதான் கல்வியாகும். ஆன்மாவின் பார்வையை அறிவொளியின் பக்கமாகத் திருப்புவதே கல்வியாகும் பல்வேறு விஷயங்களை மூளையில் திணிப்பது கல்வியன்று, வாழ்க்கை முழுவதையும் கல்வி கவர்ந்து கொள்ள வேண்டும்’” என்றார் பிளேட்டோ.

…………………………….தொடரும் ………………..

 

ஞாயிறு, 16 மார்ச், 2025

 

சான்றோர் வாய் (மைமொழி : 171-அறிவியல்

சிந்தனைகள்: சாக்ரடீஸ்-2- Socretes –கி.மு. 469 – 399.

 இவரை , நாத்திகண், தேசத்துரோகி, இளைஞர்கள் மனத்தில் நச்சுக் கருத்துகளை வளர்ப்பவன் எனக் குற்றஞ் சாற்றினர்.

ஒன்றே கடவுள் என்பது குற்றமென்றால், சிந்திக்காது செயல்படும் கண்மூடிப்பழக்கம் ஒழிய வேண்டும் என்றது குற்றமென்றால் நான் குற்றவாளியாகவே இருக்க விரும்புகிறேன்என்றார்.

 மரண தண்டனை:

மதவாத அரசு சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதித்தது. கொஞ்சம் கொஞ்சமாகௌயிரைப் பறிக்கும்எம்லாக்என்னும் நஞ்சு அருந்தி சாக வேண்டும், அரசின் ஆணை கேட்டு நல்லவர்கள் வருந்தினர் ; சிந்தனையாளர்கள் மனம் கொதித்தனர்.  

இறக்கப்போகும் உனக்கு இறுதி ஆசை என்ன என்று கேட்டனர் கொலைஞர்கள் …………..

 

நண்பா, கிரிட்டோ…! அசலிபியசுக்கு  சேவல் ஒன்று கடன்பட்டிருக்கிறேன் ; என் கடனைத் தீர்ப்பாயா..?  சாக்ரடீசின் இறுதி வார்த்தைகள் இவையே..!

சிந்தனைத் திறனில்லாதவர்கள் எடுத்த அவசர முடிவால் ஞான உரு ஒன்று அழிந்துவிட்டது.

ஏதென்சு நகர வீதிகளிலும் நிழல் பகுதிகளிலும் ஓய்வின்றி உலா வந்த கால்கள் நிலையாக ஓய்ந்துவிட்டன.

 அறிவுப் பேரொளியை வார்த்தைகளாக வடித்துக் கொட்டிய வாய் செயலிழந்துவிட்டது.

 ஞானத் தீயுமிழ்ந்த கண்கள் மூடிக்கொண்டன.

சாக்ரடீசின் உடல் மண்ணில் மறைந்து விட்டது.

ஏதென்சு நகரம் என்றோ இழைத்த அநீதிக்கு மனித இனம் மனம் நோக இன்றும் வருந்துகின்றது ;

மன்னிப்புக் கோரி சாக்ரடீசிடம் மண்டியிடுகிறது.

 

 

சனி, 8 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 170-அறிவியல் சிந்தனைகள்: சாக்ரடீஸ் , Socretes –கி.மு. 469 – 399.

 

சான்றோர் வாய் (மைமொழி : 170-அறிவியல்

சிந்தனைகள்: சாக்ரடீஸ் , Socretes –கி.மு. 469 – 399.

 

 உண்மை உயிரினும் பெரிதுநஞ்சுண்டபோதும் உண்மை பேசியவர்ஏடு எடுத்து எழுதவில்லைதெருவோரப் பரப்புரைபல அறிஞர்களை உருவாக்கிய அறிஞர் ஏன்எப்படி …? என்ற வினாக்களைத் தொடுத்து விடையங்களை விளக்கியவர்தான் சொல்லும் நெறிகளைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டியவர் -  கொள்கைக்காக வாழ்ந்தவர்.

 

 ஏதென்ஸ், பல அறிஞர்களைக் கண்டதுவணிக மையம்செல்வச் செழிப்புபண்பாட்டுக் கலப்பு ஏதென்ஸ் சிந்தனைக் களமாக விளங்கியது பேரண்டத்தின் தோற்றம் இயல்பு பற்றி மனிதன் சிந்திக்கத் தொடங்கிய இடம்.

 

கல்வி கேள்விகளில் சிறந்த அறிஞர்கள் இவர்கள் நடமாடும் பள்ளிக்கூடங்கள்வாத வல்லுநர்கள்அஞ்சா நெஞ்சம் உடையவர்கள் இவர்கள் எழுப்பும் வினாக்களைக் கண்டு  அரசும் சமயங்களும் அஞ்சினஇந்த ஏதென்சில் இளைஞர்களுக்குத் தத்துவத் தாகம் ஏற்படச் செய்த சிந்தனையாளர் சாக்ரடீசு . 

இவருடைய சிந்தனைகளை இவர் மாணவர்  தன் நூலில்  (உரையாடல் ) விளக்கியுள்ளார். சாக்ரடீசு எளிய குடும்பத்தில் பிறந்தவர் ; படையில் பணிபுரிந்தவர்.

 

சாக்ரடீசுஅறிவியல் சிந்தனைகள் :

சாக்ரடீசு ஆற்றிய உரைகளில் அதிக ஈடுபாடுகொண்ட இளைஞர்கள் அவரைச் சுற்றி வட்டமடித்தனர்; இவருடைய கருத்துகளில் முரண்பட்டவர்களும் இருந்தனர்.

 

ஈடும் எடுப்பும் இல்லா நற்பேரறிஞன் சாக்ரடீசு-” என்பது கிரேக்கநாட்டுத் தெய்வ வாக்கு,

 

 எனக்கு எதுவும் தெரியாது என்பதே எனக்குத் தெரிந்த ஒன்று

உன்னையே நீ அறிவாய்..”

 சாக்ரடீசின் உயர்ந்த கோட்பாடு அறியாதன பல உண்டு எனப் பலரை அறியச் செய்தவர்.

 

மனிதனைப் பற்றிய சிந்தனையே  முதன்மையானது “ –என்றார்.

ஏதென்ஸ் நகரில் நிலவிய  தனிமனித தத்துவம்  சமுதாய அழிவை நோக்கியது. ‘வழிபாட்டு உரிமை  என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கடவுளர்கள் கற்பிக்கப்பட்டனர். மதம்/ ,சடங்குகள் பெருகின. மனித மனத்தில் நிலவும் அச்ச உணர்வை மூலதனமாகக்கொண்டு மதத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் வாழ்ந்தனர்.

 

நேர்மையே நற்பண்புநற்பண்பே அறிவுஉலகியல் பொருள்களிலும் போக்கிலும் வாழ்க்கை நடப்பிலும் வேறுபாடுகளும் முரண்பாதுகளும் நிறைந்திருக்கக் காணலாம். இவ்வேறுபாடுகளை நீக்கி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக மாறாது தங்கிநிற்கும் பொதுத் தன்மையைக் காணவேண்டும். – என்பது சாக்ரடீசின் தத்துவம்.

அரசியல் தத்துவப் புரட்சி:

 கைகளை உயர்த்தும் கும்பல் ஆட்சி முறையை வெறுத்தார்.

அறிஞர்கள் நேர்மை என்னும் நற்பண்பு நிறைந்தவர்கள் அவர்கள் தாம் ஆளவேண்டும். சிந்தனைத் திறனும் அறிவுக்கூர்மையும் இல்லாதவர்கள் அறிஞர்கள் வகுக்கும் சட்ட அமைப்பிற்குள் இருந்து ஆளப்படுதல் வேண்டும்” சாக்ரட்டீசின்அறிஞர்களின் ஆட்சிஅரசியல் தத்துவப் புரட்சியாகும்.

>>>>>>>>>>>>சாக்ரடீசு >>>>>>>>>>தொடரும் >>>>>>>

அன்புடையீர், வணக்கம் : இத்தொடர் தொடரும் மீண்டும் மார்ச்சு 16ஆம் நாள் சந்திப்போம்….!

 

வெள்ளி, 7 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 169-அறிவியல் சிந்தனைகள். ஹெராக்லிடஸ் . Heraclitus – கி.மு. 535 – 475.

 

சான்றோர் வாய் (மைமொழி : 169-அறிவியல்

சிந்தனைகள். ஹெராக்லிடஸ் . Heraclitus – கி.மு. 535 – 475.

இவர் எஃபிசஸ் என்ற அரசபரம்பரையைச் சேர்ந்தவர். தன் உடன்பிறப்பிற்காக தன் அரசுரிமையைத் துறந்தவர். மாற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அதிகமான வாய்ப்புடைய நெருப்பே  இயற்கையின் முதல் மூலகம் எனக்கருதினார். நெருப்பு உண்டாக்கப்படுவதில்லை ; அழிக்கப்படுவதில்லை , என்றும் உள்ளது. எல்லாப்பொருள்களும் அவற்றின் பண்புகளும் அதனதன் எதிர்மறையாக மாறிக்கொண்டிருக்கின்றன.

வெப்பம் × குளிர் -  பிறப்பு × இறப்பு -  உயர்வு × தாழ்வு, இவ்வெதிர்மறை மாற்றம் இடையீடன்றித் தொடர்ந்து நடைபெறும் இயற்கை நிகழ்வே என்றார்.

…………………………தொடரும் ………………..

வியாழன், 6 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 168-அறிவியல் சிந்தனைகள். அனாக்சிமெனஸ் : Anaxi Meness-கி.மு. 588 -525.

 

சான்றோர் வாய் (மைமொழி : 168-அறிவியல்

சிந்தனைகள். அனாக்சிமெனஸ் : Anaxi Meness-கி.மு. 588 -525.

அனாக்சிமேண்டரின் மாணவர். பொருள்கள் அனைத்தும் காற்றிலிருந்து தோன்றி காற்றிலே முடிகின்றன, என்பது இவரது கொள்கை. காற்று அளவிறந்தது ; எங்கும் நிறைந்திருப்பது ; அழியாதது ; காற்றின் செறிவிற்கேற்பவும் அழுத்தத்திற்கேற்பவும் மேகம், நீர், நெருப்பு,  நிலம் எனப் பொருள்கள் பரிணாமிக்கின்றன, என்றார்.

…………………………….தொடரும்…………………….

 

சான்றோர் வாய் (மை) மொழி : 167-அறிவியல் சிந்தனைகள் . Anaxi Mander – கி.மு. 610 – 546.

 

சான்றோர் வாய் (மைமொழி : 167-அறிவியல்

சிந்தனைகள் .  Anaxi Mander – கி.மு. 610 – 546.

 

தேலிசின் மாணவர்தமது சிந்தனைகளை நூல் வடிவில் தந்தவர். இவர் தேலிசின் கருத்திற்கு முரண்பட்டவர். எந்த ஒரு மூலத்தையும் பேரண்டத்தின் முதற்காரணமாகக் கொள்ளவில்லை.. இப்பேரண்டம் எதிமறைகளின் தொடர்பு என்பது இவர் கருத்து. நீர் × நெருப்பு , வன்மை  × மென்மை என்பன போன்று பகுக்கப்படாத முழுமையான எல்லையற்ற ஒன்று இருக்கின்றது, அந்த ஒன்றே அனைத்திற்கும் மூலகாரணம். எதிலிருந்து தோன்றியதோ அதிலியே அடங்கும். மனிதனின் பரிணாமத்தை முதலில் குறித்தவர் இவரே ; மனிதன் மீனிலிருந்து தோன்றியவன் என்றார்.

…………………………………தொடரும் ……………......

புதன், 5 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 166-அறிவியல் சிந்தனைகள். தேலிஸ் - Thales – கி.மு. 6.

 

சான்றோர் வாய் (மைமொழி : 166-அறிவியல்

சிந்தனைகள். தேலிஸ் -  Thales – கி.மு. 6.

பண்டைய கிரேக்க அறிஞர் எழுவருள் (தேலிஸ், கோலன், பிட்டாலஸ், பியாஸ், சிரியோபுலங். மிசான், சிலான் ) இவரே முதல்வர்.இவர் எகிப்து சென்று வடிவக் கணிதம், வாணிபம் கற்று , கிரேக்கத்தில் தன் பட்டறிவைப் பரப்பினார் என்பர்.

இவ்வுலகம் எதனால் ஆயது என்ற வினாவை எழுப்பிய முதல்வர் இவரே.  இவர் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூலகாரணம் என்று கூறினார்.

 கதிரவனும் விண்மீன்களும் வணக்கத்திற்குரிய  கடவுளர் அல்லர். அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டிய நெருப்பின் துகள் என்றார்.

அனைத்தும்ஆன்மா  என்பது தேலிசின் கொள்கை. எல்லாப் பொருள்களுக்கும் உயிர் உண்டு என்னும் இக்கோட்பாடு  ஐலோசோயிசம்எனப்படும்.

Hylozoism

New World Encyclopedia

https://www.newworldencyclopedia.org › entry › Hyloz...

Hylozoism (Greek hyle, matter + zoe, life) is the philosophical doctrine that all matter possess life, or that all life is inseparable from matter.

      

……………………தொடரும்………………….