திங்கள், 17 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 172-அறிவியல் சிந்தனைகள்: பிளேட்டோ .Plato : கி.மு. 428 – 347.

 

சான்றோர் வாய் (மைமொழி : 172-அறிவியல்

சிந்தனைகள்: பிளேட்டோ .Plato : கி.மு. 428 – 347.

சாக்ரடீசின் மாணவர்சாக்ரடீசின் கருத்துகளை நூலாக்கியவர் பிளேட்டவின் அரசியல் தத்துவம் உயர்ந்தது. இவர் உரையாடலில் கற்பனைகவித்துவம் ஆன்மிகம் இழையோடும்.

 

காட்டுமிராண்டியாகவின்றி  - நாகரிகமுள்ள கிரேக்கர்களாகவும்அடிமையாகவின்றிஉரிமையார்களாகவும்பெண்களாகவின்றிஆண்களாகப் பிறந்ததற்கும் -  அனைத்திற்கும் மேலாகச் சாக்ரடீசின் காலத்தில் வாழும் பெருமை பெற்றதற்காவும்நான் கடவுளுக்குக் கட்டுப்பாடுடையேன்என்றார், பிளேட்டோ.

 

பிளேட்டோ எழுதிய நூல்கள் :

உரையாடல்கள் , குடியரசு, ஸ்டேட்ஸ்மேன், சட்டம்.

பிளேட்டோ, செல்வக் குடியில் பிறந்தவர். தன் ஆசான்  நஞ்சுண்டு இறந்தபின் அங்கு வாழ விரும்பாது, அறிவிலிகள் நடத்திய கும்பல் ஆட்சியை வெறுத்து வெளியேறினார். உலக நாடுகளைச் சுற்றியபின்பு ஏதென்சு திரும்பினார். அறிஞர்களை உருவாக்க அகாடமி (……….) நிறுவினார்.

 கருத்துமுத.ல் வாதம் :

பிளேட்டோவின் தத்துவ அமைப்புகருத்துமுதல் வாதம்’ . கருத்தே உறுதிப்பொருள். இக்கருத்துகள் யாவும் வெறும் வடிவங்கள்தாம். அவை ஆக்கப்பட்டவையல்ல என்பதால் அழியக்கூடியவையுமல்ல. இக்கருத்துகளை அறிவால் அறிய முடியுமே தவிரப் புலன்களால் காணமுடியாது.”

மாறும் பொருள்களும் மாறா வடிவங்களும் சேர்ந்ததே நம் காட்சிக்குட்படும் இவ்வுலகமும் பேரண்டமும்.” என்றார்.

 

பிளேட்டோவின் அரசியல், சமுதாயக் கோட்பாடு  உயர் நற்பண்பே பேரறிவு ; நற்பேரறிவே உயர் நற்பண்பு.” என்பதாகும்.

 குடியரசு:

 பகுத்தறிவு இயல்பாகவே மேம்பட்டிருப்பவர்கள் ஆளும் தகுதி உடையவர்கள் ஆண் நாயைப் போன்று பெண் நாயும்  வீட்டைக் காக்க வல்லது. “ அறிவுடைய பெண்களும் ஆள்வோர் வரிசையில் இடம் பெறலாம்.”

முடியாட்சி, குடியாட்சி,  குழுவாட்சி போன்ற அரசியல் அமைப்புகளில் ஏற்புடையது  எது..? சிறப்புடையது எது..? ஆளுகின்றவர்கள் நற்பேரறிவும் உயர் பண்பும் உடையாராயின் எல்லா அரசியல் அமைப்புகளும் ஏற்புடையனவே.

 அரசியல் அங்கங்கள் அனைத்திற்கும் உயிர் நாடியாக இருப்பவர்கள் ஆள்வோரே. குடியாட்சித் தத்துவமும் முடியாட்சித் தத்துவமும்  கலந்ததொரு அரசியல் அமைப்பு நடைமுறைக்குச்  சிறந்த அமைப்பு எனக் கருதுகிறார் பிளேட்டோ. இவ்வமைப்பில் உரிமைக்கும் அறிவுக்கும் ஒருசேர இடமுண்டு.

 

கல்வி:

 உயிரினும் மேலாக ஒழுக்கத்தை மதிக்கச் செய்வதுதான் கல்வியாகும். ஆன்மாவின் பார்வையை அறிவொளியின் பக்கமாகத் திருப்புவதே கல்வியாகும் பல்வேறு விஷயங்களை மூளையில் திணிப்பது கல்வியன்று, வாழ்க்கை முழுவதையும் கல்வி கவர்ந்து கொள்ள வேண்டும்’” என்றார் பிளேட்டோ.

…………………………….தொடரும் ………………..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக