சான்றோர் வாய் (மை) மொழி :
174-அறிவியல்
சிந்தனைகள்:
அரிஸ்டாட்டில்-2. – Aristotle; கி.மு. 384 – 322.
இவர் எழுதிய நூல்கள்:
அறிவு, அறிவியல், அழகியல், தத்துவம்.
எனும் நால்வகைப் பகுப்புகளைக் கொண்டது. அறிவுத்துறைகள்
அனைத்திலும் ஆய்வுசெய்து நூல்கள் எழுதிய தனியொரு சிந்தனையாளர்.
அரிசுடாட்டிலின் ‘அளவையியல்’ சிறப்புடையது. அறிவின்
இயல்பு, அறிவைப் பெறுவதற்கான வழிகள் – அறிவின்
ஏற்புடைமை என்பன பற்றிய தெளிவு இல்லாதவர்களிடம் முறையான சிந்தனை ஓட்டம் இருக்காது என்பது
இவரது துணிபு.
ஒவ்வொரு பொருளுக்கும் நான்கு காரணங்கள் இருக்கவேண்டும்
என்று கருதுகிறார். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பொருளிலிருந்து
குறிப்பிட்ட வடிவத்தில் குறிப்பிட்ட செயலால், குறிப்பிட்ட நோக்கத்திற்காக
உண்டாகிறது. பொருள் வடிவம், செயல் நோக்கம்,
ஆகிய நான்கு காரணங்களும் ஒன்று சேர்வதால் ஏற்படுவதே உற்பத்தி.
முக்கூற்றுச் சிந்தனை எனும் வழி அனுமானம் முழுக்க முழுக்க அரிசுடாட்டிலின்
படைப்பு. “ மனிதர்கள் அனைவரும் பகுத்தறியும் விலங்குகள்
; சாக்ரட்டீசு ஒரு மனிதன் எனவே சாக்ரட்டீசு ஒரு பகுத்தறியும் விலங்கு”
என்பதே முக்கூற்றுச் சிந்தனை. இது விளக்கத்தால்
உண்மையை அறிவது, கண்டறிந்த உண்மைகளைப் பிறருக்கு நிரூபிக்க உதவும்.
புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்க இச் சிந்தனைமுறை பயன்படாது..
“ சாக்ரட்டீசுக்கு முன்பு தத்துவமும்
அரிசுடாட்டிலுக்கு முன்பு அறிவியலும் இருந்தன என்பது
உண்மையே, ஆனால் இவர்களுடைய காலத்தில்தான் அவை வியக்கத்தக்க அளவில்
வளர்ச்சியடைந்தன என்பதும் மறுக்க முடியாத உண்மையே.” என்கிறார்
ரெனான்.
அரிசுடாட்டில் இயற்கையின் போக்கினையும் மாறுபாடுகளையும் உற்றுநோக்கி
ஆராய்ந்தார். இயற்கைச் சுழல் – தோற்றம்,
வளர்ச்சி, மாற்றம், அழிவு
என்ற நிலையில் இயங்குகிறது. உயிரின்ங்களுள் மனித இனம் உடல்,
உணர்வு ஆகியவற்றின் அமைப்பாலும் இயக்கத்தாலும் முதிர்ச்சி பெற்றிருக்கிறது.
அரிசுடாட்டில் தரும் அறிவியல் கருத்துகள் பலவும் இன்றைய அறிவியலோடு ஒத்துப்போகவில்லை.
……………..அரிசுடாட்டில் ………..தொடரும்……….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக