சான்றோர் வாய் (மை) மொழி :
176-அறிவியல்
சிந்தனைகள்:
அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.
கடவுள்
உண்டு என்றார் :
ஒவ்வொரு மாற்றத்திற்கும் கடவுள் காரணமில்லை – இயக்கத்தின் தொடக்கமாகக் கடவுளைக் கருதுகின்றார்
- தான் இயங்காமல் பிறவற்றை இயக்கும்
பேராற்றல் உடையதாய் – உரு ஒன்று இல்லாதாய் – குறைவில்லா நிறைவாய் – உலக சக்திகளின் தொகுப்பே கடவுள்
என்கிறார் - கடவுளுக்கு
விருப்பு வெறுப்பு இல்லை எனவே சடங்கு எதுவும் செய்யத்தேவையில்லை என்கிறார்.
ஆன்மா ஒரு சக்தி ;
ஆன்மாவையும்
உடலையும் கருத்தளவில் பிரிக்கலாமே தவிர நடைமுறையில் பிரிக்க முடியாது. பொருள்களைப் போல் ‘ஆன்மா’ அணுவால்
ஆனதில்லை என்பதால் அழியக்கூடியதும் இல்லை எனப் பெறப்படும்.
மனித வாழ்க்கை :
மகிழ்ச்சியைப் பெறுவதே வாழ்வின் குறிக்கோள், அஞ்சி ஒடுங்கும் கோழைத்தனம் ஓர் இறுதிநிலை.
அஞ்சுதற்கு அஞ்சாமலிருப்பது இன்னொரு இறுதிநிலை. இவை இரண்டிற்கும் இடைப்பட்டநிலையே ஏற்புடைய வாழ்க்கை.
என்பதே அரிசுடாட்டில் கருத்தாம்.
பெண்கள் :
பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும், இது இயற்கையானது. முப்பது வயது ஆண் இருபது வயது பெண்ணை
மணந்தால் அவர்களுடைய பாலுணர்வு ஒத்தநிலை உடையதாகவும் ஒரே காலத்தில் நிறைவு பெறுவதாகவும்
அமையும்.
கல்வி :
கல்வியை அரசுதான் தரவேண்டும். சிறந்த குடிமகனுக்கு ஆணையிடவும் இடவும் தெரியவேண்டும்
; ஆணைக்குப் பணிந்து நடக்கவும் தெரிய வேண்டும்.
சமுக அமைப்பு :
சமுதாயத்தோடு இணங்கி நடக்கத் தெரியாதவன் விலங்கானவன் . மொழியால் சமுதாயமும் ; சமுதாயத்தால் அறிவும் ; அறிவால் ஒழுங்கும் ; ஒழுங்கால் நாகரிகமும் விளைகின்றன.
சமுகப் புரட்சியை வெறுக்கிறார். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்த்தால் சமுதாயத்தில்
அமைதி நிலவும் என்கிறார்.
ஆட்சி
:
திறமைக்கு
முதலிடம் தரும் குழுவாட்சி முறையே குற்றங்கள் குறைந்த ஆட்சியமைப்பு. மக்களாட்சி சிறந்தது என்றாலும் எண்ணிக்கை பலம் சிலரின் சிந்தனைகளை அழித்துவிடும்.
மக்களாட்சித் தத்துவமும் குழுவாட்சித் தத்துவமும் கலந்ததொரு அரசியலமைப்பு
சிறந்தது என்று கருதுகின்றார்.
முடிவுரை:
அரிசுடாட்டிலின் இறுதிக்காலம் அவலம் நிறைந்ததாகவே இருந்தது. அலெக்சாண்டரின் ஆதரவாளர் என்பதால் மக்கள் இவரை வெறுத்தனர்.
ஏதென்சை விட்டு வெளியேறி, மனம் நொந்து நஞ்சுண்டு
இறந்தார்.
கிரேக்க நாட்டின் தத்துவப் பூங்காக்கள் சிந்தனை நீரின்றி வறட்சியால்
பட்டுப்போயின.
…………………..தொடரும் ………………………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக