சான்றோர் வாய் (மை) மொழி :
175-அறிவியல்
சிந்தனைகள்:
அரிஸ்டாட்டில்-3. – Aristotle; கி.மு. 384 – 322.
உயிர்கள் தோற்றம் :
பருமையான சடம் தூய நுண்ணிய வடிவம்பெறும்வரை இடையே பல
படிநிலைகளின் வாயிலாகக் கொள்ளும் வளர்ச்சியை ஒரு முறைப்பட்ட வளர்ச்சியாகக் கருதினார். உயிரினங்களுள் மனித இனம், உடல், உணர்வு, அமைப்பு ஆகியவற்றிலும்
இயக்கத்திலும் முதிர்ச்சி பெற்ற “வடிவம்” என்றார்.
குரங்குகள் , மனித இனத்துக்கும் இதர விலங்குகளுக்கும் இடைப்பட்டவை என்ற அரிசுடாட்டிலின்
கருத்து டார்வினால் மெய்ப்பிக்கப்பட்டது .
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் படிப்படியாக உயர்ந்து
செல்லும், படிவரிசைக்கு ஒப்பிட்ட இவர் பறவைகளும்
ஊர்வனவும் உடலமைப்பில் ஒத்திருக்கின்றன என்றார். நான்கு கால்
விலங்குகளையும் மனித இனத்தையும் இணைக்கும் பாலமாகவும் குரங்கினம் அமைகிறது என்பதோடு
உணர்வு, வாழ்க்கைமுறை, இனவிருத்தி ஆகிய
பண்புகளில் ஒன்றைவிட மற்றொன்று சற்றே உயர்ந்த சீரான படிமுறையிலான உறவு காணப்படுகிறது
என்றார்.
உயிரற்றவையிலிருந்து உயிருள்ளவை தோன்றுகின்றன , ஆனால் எந்த இடத்தில் இந்த மாற்றம் நிகழ்கிறது என்பதை வரையறுத்துச்
சொல்ல முடியாதபடி மாற்றங்கள் மிக நுட்பமாக நடைபெறுகின்றன. என்றாலும்
உயிரற்றவைக்கு அடுத்தப்படியாகத் தாவர இன்ங்களைக் கூறலாம் என்பது அவரின் அறிவியல் பார்வைக்குச்
சான்று.
உயிரின் மூலத்தையும் விலங்கினங்களின் வரலாற்றையும் ஆராய்ந்த
அரிசுடாட்டில் மனிதனுக்கு அற்புத சக்தி ஒன்று உண்டு. அதுவே பகுத்தறிவு. அந்தப்
பகுத்தறிவு ஒன்றினாலேயே உயிரினங்களின் வரிசையில் மனிதன் மேலே இருக்கிறான். உயிரினப்பாகுபாட்டில் இருந்த இடத்திலே இருத்தல் , இடம்விட்டு
இடம் பெயர்தல், பகுத்தறிவு ஆகிய மூன்று நிலைகளில் தாவரங்கள்,
விலங்குகள், மனிதன் ஆகிய படிநிலைகளை வகுத்தளிதார்.
(After Aristotle for about 2000 years nothing
was added to the knoeledge of Evolution.)
உலக வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிரினங்களைப் பற்றிய ஆய்வு
நடைபெறாமல் இருந்திருக்க முடியாது, உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஆய்வு நிகழ்ந்திருக்கக்கூடும் .
(சான்றாக ………………..!
உயிரினப்பாகுபாடு குறித்த ஆய்வு வரலாற்றில் தமிழர்களின் குறிப்பாகத்
தொல்காப்பியர் தொடங்கிப் பல சான்றோர் பெருமக்கள் பெற்ற இடங்களைக் காணலாம்.
உலோகாயதச்
சித்தர்
“ விலங்கிலிருந்து வளர்ந்தவர் நாமே – பின்
விலங்காண்டி
ஆனதும் மாந்தர்கள் தாமே
அலகில் இயற்கையில் கற்றனர் பாடம் – மன
ஆறாம்
அறிவாலே உற்றனர் மாடம்
மாறிக்கொண்டிருப்பது மாளா இயற்கை – தன்
மாற்றத்தில்
படைத்தது மாந்தர் இனத்தை
ஏறிக்கொண்டிருந்திடும் காலப்படியில் – மனிதன்
எத்தனைப்
புதுமைகள் செய்தான் முடிவில்
தகுதியின் மிகுதியே வெல்லும் வெல்லும் – இந்தத்
தங்கவேல்
லோகாயதரின் சொல்லும் வெல்லும்.”)
என்று தொன்மைக் காலந்தொட்டே உயிர்களின் தோற்றம் குறித்து மிகத் தெளிவாகவே தமிழர்கள்
இன்றை அறிவியல் ஒப்புக்கொள்ளும் அளவிற்குச் சிந்தித்துள்ளனர்.
……………அரிசுடாட்டில் -4………….தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக