வெள்ளி, 28 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 183–அறிவியல் சிந்தனைகள்: புனிதர் அகஸ்டின்-Augustine கி.பி. 354 – 430.

 

சான்றோர் வாய் (மைமொழி : 183–அறிவியல் சிந்தனைகள்: புனிதர் அகஸ்டின்-Augustine கி.பி. 354 – 430.


 இடைக் காலத் தத்துவத்தின் முன்னோடிஇவரது அன்னை கிறித்துவ சமயத்தைப் போதித்தார் ; இவருக்கு இறை நம்பிக்கை ஏற்படவில்லை ; ஐயுறுதல் கோட்பாடு உடையவராகத் தொடக்கத்தில் இருந்தார். 32 வயதில் கிறித்துவ சமயத்தில் இணைந்தார்.


 இவர் எழுதியஒப்புதல்’, ’தெய்வத்திருவுலகம்’, இவ்விரண்டு நூல்களும் சிறந்தவை.. கிரேக்கத் தத்துவ ஞானி, ‘சிசரோஇவருடைய ஞான குரு.


எடு படிஎன இறைவன் அருளக் கேட்டு இறைத் தொண்டரானார். அகஸ்டின் தத்துவக் கோட்பாடுகள் இறைவனை மையமாகக் கொண்டவை.


 இறைவனை நம் ஆன்மா நேரடியாகக் காணும் உள்ளுணர்வே புலன்கள் வழிபெறும் அறிவுகள் அனைத்திலும் உயர்வானது. உள்ளுணர்வால் இறைவனைக் காணவும் இறைவனோடு பேசவும் தியானமும் வழிபாடும் துணை செய்கின்றன. உடல் தேவைகளை விடுத்துப் புலன்களை அடக்கிச் செய்யும் வழிபாடே உண்மையானது.” என்கிறார்.


புலன்களால் நுகரப்படும் இப்பருவுலகம் அழியக் கூடியதும் மாறக்கூடியதும் ஆகும். அதற்கப்பால் ஆன்மிக நுண்ணுலகம் இருக்கிறது ; இது அழியாதது, மாறாதது. இப்பருவுலகிலிருந்து ஆன்மிக நுண்ணுலகிற்குச் செல்வதே மானுட வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்.”

இவர் கோட்பாட்டால் அரசும் சமயமும் மோதிக்கொண்டன. சமயச் செல்வாக்கு உச்சம் அடைந்தது,

 …………………………தொடரும்…………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக