செவ்வாய், 4 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 165-அறிவியல் சிந்தனைகள்: ஹோமர் - Homer – கி.மு. 700.

 

சான்றோர் வாய் (மைமொழி : 165-அறிவியல்

சிந்தனைகள்:  ஹோமர்  -    Homer – கி.மு. 700.

விஞ்ஞானத்தின் வித்து விழுந்த இடம் கிரேக்கம் என்பர்.

கிரேக்கர்களின் தத்துவக் கோட்பாடுகள்  மேலைநாட்டுத் தத்துவக் கோட்பாடுகள் அனைத்திற்கும் வித்தாக அமைந்துள்ளன. கிரேக்கர்களின் சிந்தனை ஆற்றலும் அறிவுத் திறனும் காலத்தால் அழிக்கமுடியாத சிறந்த தத்துவங்களை ஏற்படுத்தின. கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் உண்மையான த்த்துவ ஞானிகளாக அஞ்சாதஎளிய இனிய வாழ்க்கை நடத்தியவர்கள். சமயச் சார்பில்லாது நடுநின்று சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் பண்டைய கிரேக்கர்கள்.

  தத்துவ உலகின் எல்லாத் திக்கிலும் சாக்ரடீசின் பெயர் எதிரொலிக்கிறது. சாக்ரடீசு பல தத்துவக் கோட்பாடுகளின்  சங்கமம். சாக்ரடீசுக்கு முன் பல சிந்தனைச் சுடர்கள் கிரேக்க நாட்டில் ஒளிர்ந்தன. சாக்ரடீசுக்கு  முன்பிருந்த சிந்தனையாளர்கள் இயற்கையின் பேரார்ற்றலை எண்ணி வியந்தனர். இப்பேருலகின்  தோற்றம் மாற்றம் பற்றிச் சிந்தித்தனர். இபேருலகின் மூலப்பொருள் நீரென்றும் நெருப்பென்றும் காற்றென்றும் கடவுளென்றும் பலவாறு சிந்தித்தனர். எனினும் சிந்தனை உலகில் சாக்ரடீசு ஒரு சகாப்தம்.

ஹோமர்:

 இலியட், ஒடிசி எனும் அரிய காவியங்களை இயற்றியவர். இவர் கவிதையில் ஒளிரும் தத்துவக் கருத்துகள் அறிவியல் நுட்பம் சார்ந்தவை- பின் தோன்றிய கிரேக்கத் தத்துவங்களுக்கு அடிப்படையாக அமைந்தவை. ஹோமருக்குப்பின் கிரேக்கம் பல நாடுகளோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. – பல இன மக்களோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது -  அரசியல் அமைப்பு மாறியதுபுதிய தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டனதத்துவ அறிஞர்கள் பலரும்கடவுள் உண்டுஎன்னும் கருத்துடையோர்இது கிரேக்கத் தத்துவத்தின் தொடக்கக் காலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக