சனி, 22 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 177-அறிவியல் சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 

சான்றோர் வாய் (மைமொழி : 177-அறிவியல்

சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 அரிஸ்டாட்டிலின் காலத்திற்குப் பின் கிரேக்கத்தில் ஆடம்பர வாழ்வு அரும்பியது. தத்துவம் உயர்பீடத்திலிருந்து இறங்கி அன்றாட வாழ்க்கை நிலைக்கு வந்தது. இதனடிப்படையில் நால் வகைக் கோட்பாடுகள் உருவாயின.

1.)     வெறுப்புக் கோட்பாடுCynicism.

2.)     ஐயுறுதல் கோட்பாடு Scepticism.

3.)     இன்பக் கோட்பாடு - .Epicurism.

4.)     நடுநிலைக் கோட்பாடு Stoicism

 

1.)     சமுதாய அமைப்புகளையும் நடைமுறைகளையும் வெறுத்துரைத்த, தத்துவக் கோட்பாடு வெறுப்புக் கோட்பாடு. இதனை உருவாக்கியவர்  -

ஆண்டிஸ்தெனஸ் -… Antisthenes….. இவர் சாக்ரடீசின்  மாணவர்.

 உலகியல் சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் போலி மதிப்புகளையும் வெறுத்து முகம் சுளித்தார். உலகியல் இன்பங்களையும் ஆடம்பரங்களையும் வெறுத்தார்.. ஆடம்பரமாக வாழ்வதைக் காட்டிலும் அறிவு குழம்பிய பைத்தியமாக வாழ்வதையே விரும்புகிறேன் என்றார்.

டையோசீனஸ்- Diogenes:

அறிவின் சிகரம் ; அஞ்சா நெஞ்சன் ; உலகம் கொடியதுஉலகியல் வாழ்விலிருந்து ஒதுங்குவதே வீரம் ; உலகியல் வாழ்வு துன்பம் நிறைந்தது அதிலிருந்து விடுதலை பெற மனிதன் முயல வேண்டும். உலகியல் வாழ்விலும் பொருள்களிலும் காணும் இன்பம் பொய்யானது.தன்னிறைவால் கிட்டும் மனநிறைவே உண்மையான மகிழ்ச்சி. உறவும் பாசமும் மனிதனைத் துன்புறுத்தும். மனிதன் எதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ அதிலிருந்து அவனுக்குத் துன்பமில்லை.

 

2.)     ஐயுறுதல் கோட்பாடு …பைரோ Biro –

எதையும் ஏற்றுக்கொள்ளாமல் ஐயக் கண்கொண்டு நோக்கியத் தத்துவம், உருவாக்கியவர் பைரோ.

மனித மனத்தால் சிந்தனையால் உறுதியான, முழுமையான தவறாத அறிவை எக்காலத்தும் பெறமுடியாதென்றார். ஒரு செயல்முறை சிறந்ததெனக் கொள்வதற்கு நியாங்களை நிரூபிக்க இயலாது. வசதிக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம் . ஐயுற்றுக் கேள்விக் கணைகளைத் தொடுத்தால் நிறுவப்பட்ட க் கோட்பாடுகள் யாவும் நிர்மூலமாகிவிடும்.

 கி.மு. நான்கில் நிலவிய தத்துவச் சிந்தனை சாக்ரடீஸ் எழுப்பிய விடையிறுக்க முடியாத வினாக்கள் – மக்களிடம் ஐயத்தை எழுப்பின.

 டைமோன் – தான் புலன்வழி உணர்ந்ததை உறுதியான ஒன்று என்று ஒருவன் வாதிடுவதை மறுக்கின்றார். தேன் எனக்கு இனிக்கின்றது என்பதை நான் மறுக்கவில்லை ஆனால், தேன் இனிமையானது என்ற உறுதிப்பாட்டை மறுக்கிறேன். எந்தக் கருத்திற்கும் முரண்பாடான கருத்து ஒன்று உண்டு என்று நிலைநாட்டுகின்றனர்.

போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடப்பவனைப் புறக்கணித்துவிட்டுத்  தன்னுயிரைக் காத்துக்கொள்பவனே அறிவுடையவன். குற்றுயிராய்க் கிடப்பவனைக் காக்கும் பொருட்டுத் தன்னுயிரை விடுவதற்குத் தயங்கக் கூடாது என்பது எப்படி நீதியாகும்…?

’ஐயுறுதல் மட்டுமே இருந்தால் வளர்ச்சி இருக்காது’ என்பர்.

 

……………………………..தொடரும்…………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக